இங்கிலாந்தை வீழ்த்த இந்திய பக்கா பிளான்..! மேட்ச்சை தீர்மானிக்கும் பிட்ச்..! – விவரம் உள்ளே

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி உற்சாகத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் இன்று (ஜூலை 12) நோட்டிங்ஹம்மில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இரு அணிகளும் கடுமையான பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
teamindia
மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று விட்டால். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை இந்திய அணி பெற்றுவிடும். இதனால் முதல் போட்டியிலேயே இந்திய அணியை வீழ்த்த மும்மரமாக பயிற்சயில் ஈடுபட்டு வருகிறது இங்கிலாந்து அணி.

ஏற்கனவே நடைபெற்ற முதல் டி20 தொடரில் சைனா மேன் குல்தீப் யாதவின் பந்துகளை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் திணறினர். பின்னர் இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக மெர்லின் இயந்திறத்தை பயன்படுத்தி பயிற்சிகளை மேற்கொண்டது. அதற்கான பயனை இரண்டாவது டி20 போட்டியில் பெற்றது. இருப்பினும் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சும் கை கொடுத்து.
england
தற்போது இந்திய அணி சுழல் பந்து வீச்சை கொண்டே இங்கிலாந்து வீரர்களை சமாளித்து வருகின்றனர். அது போக இந்திய அணிக்கு டாஸ் ஒரு மிகப்பெரிய பலமாக அமைத்து விடுகிறது. ஒருவேளை பந்து வீச்சில் இந்திய வீரர்கள் சுதப்பினாலும் இந்திய அணியின் பேட்டிங் கொஞ்சம் கை கொடுத்து விடுகிறது.இன்று போட்டி நடைபெற உள்ள மைதானத்தின் ஆடுகளம் சூழல் பந்து வீச்சாளர்களுக்கு சதகமாக இருக்கும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின இதனால் பந்து வீச்சும் சரி பேட்டிங்கும் சரி இந்திய வீரர்களுக்கு சதாகமாகவே அமைய அதிக வாய்ப்புள்ளது.