IND vs WI : வெ.இண்டீஸை மீண்டும் மண்ணை கவ்வ வைத்த இந்தியா – ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலகசாதனை படைத்து அபாரம்

INDvsWI
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி ஜூலை 24-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கெய்ல் மேயர்ஸ் – ஷாய் ஹோப் ஜோடி 65 ரன்கள் ஒப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தபோது 39 (23) ரன்களில் மேயர்ஸ் அவுட்டானார். அதை தொடர்ந்து களமிறங்கிய ப்ரூக்ஸ் தனது பங்கிற்கு 5 பவுண்டரியுடன் 35 (36) ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அடுத்து வந்த பிரண்டன் கிங் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

Shai-Hope

- Advertisement -

அதனால் 130/3 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் வென்றே தீரவேண்டும் என்று இந்த போட்டியில் பொறுப்புடன் பேட்டிங் செய்து ஷாய் ஹோப் உடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பர்ட்னர்ஷிப் அமைத்து வலுப்படுத்தினார். 1 பவுண்டரி 6 சிக்சருடன் 74 (77) ரன்கள் குவித்த அவர் கடைசி நேரத்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரோவ்மன் போவல் 13 (10) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்த ஷாய் ஹோப் சதமடித்து 8 பவுண்டரி 3 சிக்சருடன் 115 (135) ரன்கள் குவித்து 49-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

தடுமாறிய இந்தியா:
இறுதியில் செபார்ட் 14* (11) ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 311/6 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 312 என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு 48 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க ஜோடியில் ஷிகர் தவான் 13 (31) ரன்களில் தடுமாறி ஆட்டமிழக்க அவருடன் சிறப்பாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 43 (49) ரன்களில் அவுட்டானார்.

Shreyas Iyer IND vs WI

அந்த நிலைமையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 9 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 79/3 என தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் – சஞ்சு சாம்சன் ஜோடி நிதானமாகவும் பொறுப்பாகவும் 4-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றியது. அதில் ஸ்ரேயாஸ் அய்யர் 63 (71) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 54 (51) ரன்களில் சஞ்சு சாம்சனும் ரன் அவுட்டானார். அந்த நிலையில் வந்த தீபக் ஹூடா தனது பங்கிற்கு 33 (36) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததை பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அடுத்து வந்த ஷர்துல் தாகூர் 3 (6) ஆவேஷ் கான் 10 (12) என சொற்ப ரன்களில் அவுட்டாக்கியது.

- Advertisement -

த்ரில் வெற்றி:
இருப்பினும் சாம்சன் அவுட்டானதும் 74 பந்துகளில் 114 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கி நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த அக்சர் பட்டேல் கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 64* (35) ரன்களை 182.86 என்று அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்டு இந்தியாவுக்கு பினிஷிங் கொடுத்தார். அதனால் 49.4 ஓவரில் 312/8 ரன்களை எடுத்த இந்தியா வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மேயர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அக்ஷர் பட்டேல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Axar Patel

முன்னதாக ஏற்கனவே இத்தொடரின் முதல் போட்டியிலும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றிருந்த இந்தியா இந்த வெற்றியால் 2 – 0* (3) என்ற கணக்கில் இந்த ஒருநாள் தொடரை கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இந்திய வீரர்களுடன் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக தொடர்களை தொடர்ச்சியாக வென்ற அணி என்ற புதிய உலக சாதனையையும் இந்தியா படைத்தது.

- Advertisement -

புதிய உலகசாதனை:
கடைசியாக கடந்த 2006இல் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பிரைன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீசிடம் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்தியா 4 – 1 என்ற கணக்கில் தோற்றிருந்தது.

indvswi

அதன்பின் கடந்த 15 வருடங்களில் இவ்விரு அணிகளும் மோதிய 11 ஒருநாள் தொடர்களை முறையை 3 – 1 (4), 2 – 1 (4), 3 – 2 (5), 4 – 1 (5), 2 – 1 (3), 2 – 1 (5), 3 – 1 (5), 3 – 1 (5), 2 – 0 (3), 2 – 1 (3), 3 – 0 (3) என தொடர்ச்சியாக தோல்வியே அடையாமல் இந்தியா வென்று வருகிறது. தற்போது 12-வது தொடரில் மீண்டும் வெஸ்ட் இண்டீசை மண்ணைக் கவ்வ வைத்துள்ள இந்தியா இந்த புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: IND vs WI : இந்த வாய்ப்பு கிடைக்க 5 வருஷம் ஆச்சு. தனது அதிரடிக்கான காரணத்தை கூறிய – ஆட்டநாயகன் அக்சர் படேல்

கத்துக்குட்டியான ஜிம்பாப்வேக்கு எதிராக அதிகபட்சமாக 11 ஒருநாள் தொடர்களில் தொடர்ச்சியாக வென்றுள்ள பாகிஸ்தான் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மேலும் அனைத்துவிதமான கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீசிடம் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement