47 பவுண்டரி.. 37 முறை 200.. பட்டாசாக விளையாடிய இந்தியா.. சிஎஸ்கே, சோமர்செட் முந்தி 2 உலக சாதனை

India Record
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்று அசத்தியுள்ளது. அதிலும் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 297-3 ரன்கள் குவித்து மிரட்டியது.

அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த முழு உறுப்பு நாட்டு அணி என்ற உலக சாதனையும் இந்தியா படைத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111, கேப்டன் சூரியகுமார் யாதவ் 75 ரன்கள் எடுத்தனர். வங்கதேசத்திற்கு அதிகபட்சமாக தன்சிம் ஹசன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் சேசிங் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 164-7 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது.

- Advertisement -

இந்தியாவின் உலக சாதனை:

அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரிடாய் 63* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் வெற்றி பெற்ற இந்தியா சவால் விட்ட வங்கதேசத்தை தோற்கடித்து ஒய்ட்வாஸ் செய்து கோப்பையை முத்தமிட்டது. முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய அணி 25 ஃபோர்ஸ் மற்றும் 22 சிக்சர்கள் என மொத்தமாக 47 பவுண்டரிகள் அடித்தன.

இதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு ஃஇல்போவ் மைதானத்தில் துருக்கி அணிக்கு எதிராக சீசக் குடியரசு அணி 43 பவுண்டரிகள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் இப்போட்டியையும் சேர்த்து இந்திய அணி தங்களுடைய கேரியரில் 37 முறை 200க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

37 முறை 200 ரன்ஸ்:

இதன் வாயிலாக ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு போட்டியில் 200க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த அணி என்ற சோமர்செட் சாதனையை தகர்த்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட் 36 முறை 200+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அதே பட்டியலில் ஐபிஎல் தொடரின் சிஎஸ்கே அணி மூன்றாவது (35 முறை) இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: இப்படி விளையாடுனா எப்படி ஜெயிக்க முடியும்.. இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – வங்கதேச கேப்டன் வருத்தம்

சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா (23 முறை) ஏணி வைத்தாலும் எட்ட முடியாத உயரத்தில் 2வது இடத்தில் உள்ளது. இது போக ஒரு டி20 போட்டியில் முதல் 10 ஓவரில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த ஆசிய அணியாகவும் இந்தியா சாதனை படைத்தது. இந்தப் போட்டியில் இந்தியா முதல் 10 ஓவரில் 152-1 ரன்கள் குவித்து இந்த சாதனை படைத்தது.

Advertisement