- Advertisement -
இந்திய கிரிக்கெட்

500 ரன்ஸ்.. 2015க்குப்பின் இந்தியா மோசமான சாதனை.. கம்பீரை ராஜினாமா செய்யுமாறு ரசிகர்கள் விளாசல்

மான்செஸ்டரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 358 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 544/7 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு ஜாக் கிராவ்லி 84, பென் டக்கெட் 94, ஓலி போப் 71, ஜோ ரூட் 150, கேப்டன் ஸ்டோக்ஸ் 77* ரன்கள் எடுத்து இந்தியாவை பந்தாடினர். தற்சமயத்தில் இந்தியாவை விட இங்கிலாந்து 186 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

2015க்குப்பின் மோசமான சாதனை:

முன்னதாக இப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா இருந்தும் இந்தியா 500க்கும் மேற்பட்ட ரன்களை (544*) வாரி வழங்கியுள்ளது. இதன் வாயிலாக ஒரு சேனா வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் 10 வருடங்கள் கழித்து இந்தியா 500க்கும் மேற்பட்ட ரன்களை வழங்கி மோசமான சாதனை படைத்துள்ளது. கடைசியாக 2015 சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 572/7 (டிக்ளேர்) ரன்களை வழங்கியிருந்தது.

அதனால் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் சூழலில் சிக்கியுள்ளதாக ரசிகர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். அப்படி தோற்றால் 3 – 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்து இத்தொடரை வென்று விடும்.

- Advertisement -

கம்பீரை நீக்குங்க:

அதன் காரணமாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் டெஸ்ட் போட்டிகளில் தம்முடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் கத்துக்குட்டி வங்கதேசத்துக்கு எதிராக 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றது. ஆனால் சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் முதல் முறையாக ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்த இந்தியா 10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் 3 – 1 (5) என்ற கணக்கில் தோற்றது.

இதையும் படிங்க: நேத்து பவுன்சர்ல 24 மணிநேரம் லேட்.. இன்று 69 ஓவர்ஸ் சுந்தர் வெய்டிங்.. கில் கேப்டன்ஷிப்பை சாடிய சாஸ்திரி

தற்போது இங்கிலாந்திலும் தோற்றால் கம்பீர் தலைமையில் இந்தியா ஹாட்ரிக் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திக்கும். அவருடைய தலைமையில் இதுவரை இந்தியா 13 போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ளது. எனவே இங்கிலாந்தில் தோற்றால் இத்தொடர் முடிந்ததும் கம்பீரை நீக்கி விட்டு விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ரசிகர்கள் கோரிக்கை வைப்பதை பார்க்க முடிகிறது.

- Advertisement -