
அயர்லாந்து நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இழந்தது. அந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் முதல் ஆட்டத்தில் மிக விரைவாகவே ஆட்டமிழந்து வெளியேறினார்.
இப்படி தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் மோசமாக அவர் விளையாடியதன் காரணமாக அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை டி20 போட்டிகளுக்கான துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாட வைக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் கடந்து சில நாட்களாகவே நீடித்து வருகின்றன.
ஆனால் முன்னாள் வீரர்கள் பலரும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து டி20 அணியின் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக்கும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை தற்போது கடினமான சூழலை சந்தித்துள்ளார். தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் அவர் சிறப்பாக விளையாடாததால் அவரை அணியிலிருந்து நீக்கிவிடக்கூடாது. ஏனெனில் சஞ்சு சாம்சன் போன்ற ஒரு அற்புதமான வீரர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.
இதையும் படிங்க : பறிபோன ரோஹித் சர்மாவின் மகுடம்.. ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய ஆஸ்திரிய வீரர் – விவரம் இதோ
டி20 உலககோப்பை தொடரில் அழுத்தமான சூழலில் சிறப்பாக விளையாடி ரன் குவித்திருந்தார். அவரது திறனில் எந்த சந்தேகமும் கிடையாது. அதே வேளையில் சூர்யவன்ஷியும் நல்ல திறமையான வீரர் தான் அதற்காக அவருக்கு உடனடியாக சஞ்சு சாம்சனின் இடத்தை வழங்கக் கூடாது. அவரும் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர்தான் இருந்தாலும் அந்த ஒரு காரணத்திற்காக தற்போது விளையாடி வரும் சஞ்சு சாம்சனை நீக்கினால் அது தவறான முடிவாகும் என்று தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.