303 ரன்ஸ் பார்ட்னர்ஷிப்.. இந்தியாவை வெளுத்த ப்ரூக் – ஸ்மித்.. 11 வருடத்துக்கு பின் வீழ்ச்சியை கண்ட பரிதாபம்

Harry Brook
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 587 ரன்கள் எடுத்து அசத்தியது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 19, ஓலி போப் 0, பென் டக்கெட் 0, ஜோ ரூட் 22, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 0 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

303 ரன்ஸ் பார்ட்னர்ஷிப்:

அதனால் 84/5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஹாரி ப்ரூக் ஜேமி ஸ்மித் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். அதில் ப்ரூக் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் பிரசித் கிருஷ்ணாவுக்கு எதிராக ஒரே ஓவரில் 23 ரன்கள் அடித்த ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டை போல வேகமாக பேட்டிங் செய்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 80 பந்துகளில் சதத்தை அடித்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஹரி ப்ரூக் தம்முடைய பங்ககிற்கு சதத்தை அடித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார். நேரம் செல்ல செல்ல இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது பிரிந்தது.

- Advertisement -

2014க்குப் பின் இந்தியா பரிதாபம்:

அதில் ஹரி ப்ரூக் 158 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் போல்ட்டானார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 வருடங்கள் கழித்து இந்தியா ஒரு போட்டியில் 300+ ரன்களை பார்ட்னர்ஷிப் கொடுத்து பரிதாபத்தை சந்தித்துள்ளது. இதற்கு முன் கடைசியாக 2014 வெலிங்டன் போட்டியில் 94/5 என நியூஸிலாந்து சரிந்த போது ப்ரெண்டன் மெக்கெல்லாம் – பிஜி வாட்லிங் இந்தியாவுக்கு எதிராக 300+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே டீமுக்கு வந்தா இந்த 2 பேர்ல ஒருத்தர் தான் ராஜஸ்தானுக்கு போவாங்க – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

அந்த வகையில் 11 வருடங்கள் கழித்து இந்தியாவின் பவுலிங் இந்த போட்டியில் தடுமாறியது ரசிகர்களுக்கு கலக்கத்தைக் கொடுத்தது. இருப்பினும் பர்மிங்காம் பிட்ச் ஃபிளாட்டாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தி வருகிறார்கள். அதையும் தாண்டி இங்கிலாந்தை சுருட்டி முன்னிலை பெற்று இப்போட்டியில் வெற்றி பெற இந்திய அணி முயற்சித்து வருகிறது.

Advertisement