கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இடம்பெயர்ந்த சஞ்சு சாம்சன் அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து 2021-ல் இருந்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே சஞ்சு சாம்சன் தலைமையின் கீழ் ராஜஸ்தான் அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.
சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராஜஸ்தான் அணிக்கு செல்லப்போவது யார்? : ஆகாஷ் சோப்ரா கணிப்பு
அதிலும் குறிப்பாக 14 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்த அந்த அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியிருந்தது. இந்நிலையில் இந்த 2025 ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அந்த அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்டுள்ள சிறிய அதிருப்தி காரணமாக சஞ்சு சாம்சன் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என்று அதிகளவு பேசப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறும் அவரை டிரேடு முறையில் சிஎஸ்கே அணி வாங்க இருப்பதாகவும் கடந்து சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது குறித்து பேசியிருந்த சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் டிரேடுக்கு தயாராக இருந்தால் நாங்கள் அவரை வாங்குவது உறுதி என்று கூறியிருந்தார்.
ஏனெனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வதோடு மட்டுமின்றி தலைமை பண்பும் உடையவர் என்பதனால் தோனிக்கு சரியான மாற்றுவீரராக அவர் இருப்பார் என்று கருதி சிஎஸ்கே அணி அந்த முடிவை எடுக்க தயாராக உள்ளதாக அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வரும் பட்சத்தில் எந்த வீரர் ராஜஸ்தான் அணிக்கு செல்வார்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் டிரேடிங் முறையில் சிஎஸ்கே அணிக்கு வந்தால் நிச்சயம் அது ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். அதோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்று வீரராக ரவீந்திர ஜடேஜா அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரில் ஒருவர் ராஜஸ்தான் அணிக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : 587 ரன்ஸ் அடிச்ச இந்தியாவை தோற்கடிச்சு காட்டுறோம்.. நேராக சவால் விட்ட இங்கிலாந்து கோச்.. ஜடேஜா பதிலடி
ஏனெனில் தற்போதைய ராஜஸ்தான் அணியில் அனுபவ இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத வேளையில் இவர்கள் இருவரில் ஒருவர் நிச்சயம் அந்த அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சில ஆண்டுகள் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை அவர்கள் விரும்பும் மாட்டார்கள் என்றும் அதனால் ஜடேஜா அந்த அணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



