இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் முதல் நான்கு நாள் ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் பாலோ ஆனுக்கு அருகில் சென்ற இந்திய அணி எப்படியோ ஒரு வழியாக பாலோ ஆனை கடந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருண பகவானால் தப்பிக்கப்போகும் இந்திய அணி :
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவிக்க அதனைத் தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் குவித்துள்ளது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பும்ரா 10 ரன்களுடனும், ஆகாஷ் 27 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
இந்த ஜோடி பத்தாவது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்க்கவே இந்தியா ஒரு வழியாக பாலோ ஆனை கடந்தது. அதனை தொடர்ந்து 193 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கும் இந்திய அணியானது எஞ்சியுள்ள கடைசி விக்கெட்டையும் இழந்துவிட்டால் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும்.
அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கும் இலக்கினை துரத்தி விளையாட வேண்டும். ஒரு கட்டத்தில் இந்த போட்டியில் இந்திய அணி எளிதில் தோல்வியை சந்தித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மழை காரணமாக தற்போது இந்த போட்டி டிராவில் முடியுடைய அதிக வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் போட்டியின் ஐந்தாம் நாளான இன்று மொத்தமாக 98 ஓவர்கள் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டியின் முதல் நான்கு நாட்களில் மொத்தமாகவே சேர்த்து 192 ஓவர்கள் தான் வீசப்பட்டுள்ளது. இந்த போட்டி கிட்டத்தட்ட 10 முறைக்கு மேல் மழை காரணமாக அடிக்கடி தடைபட்டுள்ளது. இதன் காரணமாக ஐந்தாம் நாளான இன்றும் நிச்சயம் காலையிலும், மதிய வேளையிலும் மழை பெய்யும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : விஜய் ஹசாரே தொடருக்கான கேரளா அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது ஏன்? – நிர்வாகம் கொடுத்த விளக்கம்
இதன் காரணமாக நிச்சயம் அந்த 98 ஓவர்களை வீச முடியாது. எனவே ஆஸ்திரேலியா அணி 20-30 ஓவர்கள் பேட்டிங் செய்தாலும் இந்திய அணி 30 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து சமாளித்து விட்டால் நிச்சயம் இந்த போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே வருண பகவானின் உதவியுடன் இந்திய அணி இந்த போட்டியின் தோல்வியிலிருந்து தப்பிக்கப்போவது உறுதி.



