விஜய் ஹசாரே தொடருக்கான கேரளா அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது ஏன்? – நிர்வாகம் கொடுத்த விளக்கம்

Samson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபலமான உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரானது எதிர்வரும் டிசம்பர் 21-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 34 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் குரூப்-பி பிரிவில் கேரளா அணியும் அங்கம் வகிக்கிறது. ஏற்கனவே அண்மையில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடிய கேரளா அணி அந்தத் தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்த வேளையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது.

சஞ்சு சாம்சன் இடம்பெறாதது ஏன்? :

அதனை தொடர்ந்து கேரளா அணியானது எதிர்வரும் விஜய் ஹசாரே தொடரில் விளையாட தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த விஜய் ஹசாரே தொடருக்கான கேரளா அணி அறிவிக்கப்பட்ட வேளையில் கேரளா அணியில் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சஞ்சு சாம்சன் ஏன் அந்த தொடரில் இடம்பெறவில்லை? என்பது குறித்து கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கத்தை அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் தற்போதைக்கு போட்டியிலிருந்து விலகி இருக்கிறார்.

நாங்கள் அவரது பெயரை அணியிலிருந்து நீக்கவில்லை. இது அவருடைய தனிப்பட்ட முடிவு என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சஞ்சு சாம்சன் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் விளையாடாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் சர்வீசஸ் அணிக்கு எதிராக 75 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் கேரளா அணிக்கு மிக முக்கியமான வீரராக இருந்த வருகிறார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் முன்னேற்றம் கண்ட நியூசிலாந்து – விவரம் இதோ

இவ்வேளையில் அவர் இல்லாமல் இந்த தொடரில் அந்த அணி பங்கேற்க இருக்கிறது. இந்த விஜய் ஹசாரே தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை என்றாலும் அடுத்தடுத்து நடைபெற இருக்கும் டி20 தொடர்களில் இந்திய அணியில் நிச்சயம் அவர் இடம் பிடித்து விளையாடுவார் என்பது உறுதி.

Advertisement