சஞ்சு சாம்சனுக்கு சான்ஸ் கொடுத்துட்டா மட்டும் உ.கோ ஜெயிச்சுட முடியுமா? வேஸ்ட் தான் – முன்னாள் வீரர் விமர்சனம்

Sanju Samson
- Advertisement -

கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட பல வீரர்களில் ஒருவராக உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதில் அசத்தாத அவருக்கு அதன் பின் 4 வருடங்கள் கழித்து 2019இல் தான் 2வது போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது என்பதே பெரிய வேதனையாகும். அதைத்தொடர்ந்து 2021 வரை 1 வருடத்திற்கு ஒருமுறை 6 மாதத்திற்கு ஒருமுறை என நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்த அவர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இருந்ததை காரணம் காட்டி இந்திய அணி நிர்வாகமும் பிசிசிஐயும் தொடர்ந்து கழற்றி விட்டு வந்தது.

Samson

- Advertisement -

ஆனால் மனம் தளராமல் தொடர்ந்து போராடிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் ராஜஸ்தான் அணியை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். இருப்பினும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடரில் தேர்வு செய்யப்படாத அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கொந்தளித்தனர். அதனால் 2022 ஜூலை மாதம் அயர்லாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் வாய்ப்பு பெற்று முதல் முறையாக அரை சதம் அடித்து அசத்திய அவர் அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் சீனியர்கள் வந்த காரணத்தால் மீண்டும் கழற்றி விடப்பட்டார்.

வேஸ்ட் தான்:
அதை தொடர்ந்து ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் முறையாக ஆட்டநாயகன் விருது வென்று சாதித்த அவர் கடந்த அக்டோபர் மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றியில் பங்காற்றினார். இருப்பினும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 உலக கோப்பையில் புறக்கணிக்கப்பட்ட அவர் அடுத்ததாக விரைவில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் வரை மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளார்.

Sanju Samson

ஆனால் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முக்கிய கேட்ச் விட்டு 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த கேஎல் ராகுல் மீண்டும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளது ரசிகர்களை கொந்தளிக்க வைக்கிறது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் உலகக் கோப்பை உட்பட்ட நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

ஆனால் அது நிச்சயமாக நடைபெறாது என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் நிதர்சனத்தை விளக்கி பேசியது பின்வருமாறு. “அவர் சிறப்பாக விளையாடும் போது பேட்டிங்கை எளிதாக்குகிறார். அவர் தன்னுடைய அணியை ரஞ்சி மற்றும் ஐபிஎல் ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். இருப்பினும் இந்தியாவுக்காக பெற்ற ஒரு சில வாய்ப்புகளை அவர் முழுமையாக பயன்படுத்தவில்லை. இந்த நிதர்சனத்தை ரசிகர்கள் புரிந்து கொள்ள மறுப்பார்கள். ஆனால் தற்போதைய இந்திய அணியில் குறைவான வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும் என்பதை சஞ்சு உணர்ந்துள்ளார். அதாவது அவருக்கு 11 பேர் அணியில் இடமில்லை”

Chopra

“இங்கே இரட்டை சதமடித்த இசான் கிசானுக்கு அடுத்த 5 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் 5வது இடத்தில் விளையாடுமாறு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் கிடைத்த இடம் அவருக்கானது அல்ல. அது கேஎல் ராகுல் இல்லாததால் கிடைக்கவில்லை. எனவே இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நீங்கள் இறுக்கமாக பிடித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அதில் அசத்த தவறினால் வருந்தி பயனில்லை. சஞ்சு சாம்சன் கடவுளால் இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்பட்டவர் என்ற உணர்வுக்கு காணப்படுகிறது”

இதையும் படிங்க:IND vs NZ : உலகையே மிரட்டும் மிட்சேல் ஸ்டார்க்கை அசால்ட்டாக டீல் செய்யும் சுப்மன் கில், யூனிஸ் கானை மிஞ்சி புதிய சாதனை

“குறிப்பாக அவரை வைத்து விளையாடினால் உலகக் கோப்பை உட்பட அனைத்தும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் பவுலர்கள் மோசமாக செயல்பட்டார்கள் அல்லது தினேஷ் கார்த்திக், ரிசப் பண்ட் அவருக்கு முன்னால் விளையாடியிருப்பதையோ அவர்கள் உணர மாட்டார்கள். நிதர்சனம் என்னவெனில் அவருடைய பேட்டிங் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் விளையாடினால் நாம் வென்று விடுவோம் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள” என கூறினார்.

Advertisement