357 ரன்ஸ்.. காயத்தை தாண்டி அசத்தும் ருதுராஜ்.. இஷான் கிசானுடன் 189 ரன்ஸ் பார்ட்னர்ஷிப் போட்ட இந்திரஜித்

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2024 துலீப் கோப்பையின் 2வது ரவுண்ட் போட்டிகள் செப்டம்பர் 12ஆம் தேதி துவங்கின. அதில் அனந்தபூரில் துவங்கிய 4வது போட்டியில் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சி அணிக்கு கேப்டன் ருதுராஜ் பவுண்டரியுடன் ஆட்டத்தை துவங்கினார். ஆனால் அப்போது காயத்தை சந்தித்த அவர் மேற்கொண்டு விளையாட முடியாமல் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி சென்றார். இருப்பினும் அடுத்ததாக வந்த ரஜத் படிடார் மற்றொரு துவக்க வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் ஜோடி சேர்த்து நிதானமாக விளையாடினர்.

- Advertisement -

இஷான் கிசான் அசத்தல்:

அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த அந்த ஜோடியில் ரஜத் படிடார் 40 ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன் 43 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அதைத்தொடர்ந்து மற்றொரு தமிழக வீரர் பாபா இந்திரஜித் மற்றும் இசான் கிசான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

அதில் இந்திரஜித் நிதானமாக விளையாடி நிலையில் இசான் கிசான் தம்முடைய ஸ்டைலில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து எதிரணிக்கு சவாலை கொடுத்த அந்த இருவருமே அரை சதமடித்தனர். அந்த ஜோடியில் அதிரடியாக விளையாடிய கிசான் கிசான் 14 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அசத்தும் ருதுராஜ் அணி:

அவருடன் 4வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பாபா இந்திரஜித் 9 பவுண்டரியுடன் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் முதலுதவிகளை எடுத்துக்கொண்டு காயத்தை தாண்டி மீண்டும் விளையாட வந்தார். ஆனால் காயத்துக்கு சந்தித்த பின்பும் அதே வேகத்துடன் விளையாடிய அவர் முதல் நாள் முடிவில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 46* (50) ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க: 14 போர்ஸ் 3 சிக்ஸ்.. 103 பந்தில் சதம்.. கடைசி நேரத்தில் அசத்திய இஷான் கிசான்.. அடுத்தடுத்த கம்பேக்.. பிசிசிஐக்கு மெசேஜ்

அவருடன் எதிர்புறம் மானவ் சுதர் 8* ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்சமயத்தில் முதல் நாள் முடிவில் 357-5 ரன்கள் குவித்துள்ள இந்தியா சி அணி நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் வென்ற அந்த அணி இப்போட்டியிலும் அசத்தத் துவங்கியுள்ளது. மறுபுறம் இந்தியா பி அணிக்கு இதுவரை அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Advertisement