154/4 டூ 192க்கு அவுட்.. 12 போல்ட்.. லார்ட்ஸில் இங்கிலாந்தை உடைத்த தமிழன் சுந்தர்.. இந்தியா தனித்துவமான சாதனை

IND vs ENG
- Advertisement -

லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 10ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 387 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடிய இந்தியாவும் சிறப்பாக விளையாடி சரியாக 387 ரன்கள் குவித்து ஸ்கோரை சமன் செய்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74, ஜடேஜா 72 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட்டை 12 ரன்னில் அவுட்டாக்கிய சிராஜ் அடுத்து வந்த ஓலி போப்பை 4 ரன்னில் காலி செய்தார்.

- Advertisement -

கலக்கிய தமிழன்:

அடுத்ததாக வந்த ஜோ ரூட் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் அதிரடி காட்ட முயற்சித்த ஹாரி ப்ரூக் 23 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் போல்ட்டானார். ஆனால் மறுபுறம் சவாலைக் கொடுத்த ஜோடி 40 ரன்கள் எடுத்த போது வாஷிங்டன் சுந்தர் சுழலில் கிளீன் போல்ட்டானார். அதோடு நிற்காத சுந்தர் அடுத்து வந்த ஜேமி ஸ்மித்தை 8 ரன்னில் போல்ட்டாக்கி மிரட்டினார்.

அடுத்து வந்த கிறிஸ் ஓக்ஸ் 10, கார்ஸ் 1 ரன்னில் பும்ரா வேகத்தில் போல்டானார்கள். மறுபுறம் 33 ரன்கள் எடுத்து சவாலை கொடுத்த பென் ஸ்டோக்ஸை 33 ரன்னில் போல்டாக்கிய சுந்தர் சோயப் பசிரையும் 2 ரன்னில் காலி போல்ட்டாக்கினார். அதனால் இங்கிலாந்தை 192 ரன்களுக்கு இந்தியா சுருட்டி வீசியது. இந்தியாவுக்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 4, பும்ரா 2, சிராஜ் 2, ஆகாஷ் தீப் 1 விக்கெட் எடுத்தார்கள்.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:

குறிப்பாக 154/4 என்ற நல்ல நிலையில் இங்கிலாந்து இருந்த போது ரூட், ஸ்டோக்ஸ், ஸ்மித் ஆகிய 3 தரமான பேட்ஸ்மேன்களை போல்டாக்கிய தமிழக வீரர் சுந்தர் இங்கிலாந்தின் மிடில் ஆர்டரை உடைத்தார் என்றே சொல்லலாம். இப்போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் மொத்தம் 12 முறை போல்ட்டாக்கினார்கள். இதன் வாயிலாக வரலாற்றில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக பேட்ஸ்மேன்களை போல்டாக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: இது பஸ்பால் இல்ல ஆணவம்.. 15 நிமிடத்துக்கு முன் திமிரை காட்டிய இங்கிலாந்தை.. விளாசிய சங்ககாரா

இதற்கு முன் 2024 ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 10 போல்ட் விக்கெட்டுகள் எடுத்ததே இந்தியாவின் முந்தைய அதிகபட்சமாகும். இதைத்தொடர்ந்து 193 என்ற இலக்கை இந்தியா துரத்தி வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் 1986இல் 136 ரன்களை துரத்தி வென்றதே இந்தியாவின் முந்தைய அதிகபட்ச வெற்றிகரமான சேசிங்காகும். எனவே 193 என்ற கடினமான இலக்கை துரத்தி இந்தியா வெல்ல முயற்சித்து வருகிறது.

Advertisement