- Advertisement -
இந்திய கிரிக்கெட்

117 பிளேயர்ஸ்.. 2016 தோனி போல முடிவை எடுத்த சூரியகுமார்.. பாகிஸ்தானை முந்தி இந்தியா ஸ்பெஷல் சாதனை

வங்கதேசத்துக்கு எதிராக அக்டோபர் ஆறாம் தேதி குவாலியரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்தை 127 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. பின்னர் பேட்டிங் செய்த இந்தியா 11.5 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து அதிரடியான வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 39*, கேப்டன் சூரியகுமார் 29, சஞ்சு சாம்சன் 29 ரன்கள் எடுத்தனர். பந்து வீச்சில் அதிகபட்சமாக 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3, அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்தப் போட்டியில் நித்திஷ் ரெட்டி மற்றும் யாதவ் ஆகிய 2 வீரர்கள் இந்தியாவுக்கு அறிமுகமானார்கள்.

- Advertisement -

2016க்குப்பின் 2 வீரர்கள்:

கடந்த ஐபிஎல் தொடரில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ஹைதராபாத் அணியில் அசத்திய காரணத்தால் நித்திஷ் ரெட்டி 21 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார். அதே போல லக்னோ அணியில் மிரட்டலாக பந்து வீசி அசத்திய மயங் யாதவ் 22 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமானார்.

இதனால் 8 வருடங்கள் கழித்து ஒரே டி20 போட்டியில் 23 வயதிற்கு உட்பட்ட 2 வீரர்கள் இந்திய அணிக்காக அறிமுகமானார்கள். கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் அப்போதைய கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் 23 வயதிற்குள் இந்தியாவுக்காக அறிமுகமானவர்கள். தற்போது அதே போன்ற முடிவை சூரியகுமார் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எடுத்துள்ளது.

- Advertisement -

117 இந்திய வீரர்கள்:

இது போக நிதிஷ் ரெட்டி மற்றும் மயங் யாதவ் ஆகியோரை சேர்த்து இதுவரை இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மொத்தம் 117 வீரர்கள் விளையாடியுள்ளனர். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வீரர்கள் விளையாடிய அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் பாகிஸ்தானுக்கும் அதிகபட்சமாக 116 வீரர்கள் விளையாடியுள்ளனர்

இதையும் படிங்க: ஐபிஎல் அணிக்கிட்ட வங்கதேசம் தோத்துட்டாங்க.. இந்த 4 பேரும் சேர்ந்தா ஆஸி அணியும் தெறிக்கும்.. பசித் அலி

அதே பட்டியலில் 3, 4, 5வது இடங்களில் ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா முறையே 116, 111, 108 வீரர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதைத்தொடர்ந்து இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. அப்போட்டி தலைநகர் டெல்லியில் இரவு 7:00 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -