வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்து நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக குவாலியரில் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேசத்தை 127 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. பின்னர் 11.5 ஓவரில் 132-3 ரன்கள் எடுத்த இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.
அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் டி20 தொடரிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. முன்னதாக பாகிஸ்தானை வீழ்த்தியதைப் போல டெஸ்ட் தொடரில் உங்களை வீழ்த்துவோம் என்று இந்திய அணிக்கு வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ சவால் விடுத்திருந்தார். ஆனால் டெஸ்ட் தொடரில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்றது.
ஐபிஎல் அணியிடம்:
அதே போல டி20 தொடரில் வெல்வோம் என்று சவால் விட்ட அவருடைய தலைமையிலான வங்கதேச அணி மீண்டும் தோல்வியையே சந்தித்துள்ளது. இந்நிலையில் குவாலியர் டி20 போட்டியில் உண்மையில் வங்கதேச அணி இந்திய ஐபிஎல் அணியிடம் தோற்றதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். மேலும் பும்ரா, ஷமி, சிராஜ், மயங் யாதவ் ஆகியோர் சேர்ந்து விளையாடினால் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தெறிக்க விட்டு இந்தியாவை டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி பசித் அலி பேசியது பின்வருமாறு. “இது பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த அதே வங்கதேச அணி தானா? முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக தோற்ற அவர்கள் 2வது டெஸ்ட் போட்டியில் 2 நாட்களில் தோற்றனர். அவர்களை மழையால் கூட காப்பாற்ற முடியவில்லை. இந்தியா தங்களுடைய கிரிக்கெட்டை அதிரடியாக மாற்றியுள்ளது. வங்கதேசம் அவர்களுடைய பசிக்காக வந்துள்ளது”
ஆஸ்திரேலிய தொடரில்:
“சொல்லப்போனால் இது இந்திய அணியல்ல. ஐபிஎல் அணி. ஏனெனில் ஜெய்ஸ்வால், கில், அக்சர் படேல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ், பிஸ்னோய் போன்ற முக்கிய வீரர்கள் விளையாடவில்லை. அப்படியிருந்தும் வங்கதேசத்தை 11 ஓவரில் இந்தியா நொறுக்கியது. பாண்டியா சிக்சருடன் ஃபினிஷிங் செய்தார். 2 அறிமுக வீரர்களில் மயங் யாதவுக்கு இது கனவு நிஜமான தருணமாகும்”
இதையும் படிங்க: ஒரு நிமிட மாற்றத்துக்க 2 வருடம் ஆச்சு.. இந்திய அணியில் கம்பேக் கொடுத்தது பற்றி வருண் சக்ரவர்த்தி
“முதல் ஓவரை 149.8கி.மீ உட்பட மெய்டனாக வீசிய அவர் காயத்தால் மட்டுமே 150 கிலோ மீட்டர் வேகத்தை தொடவில்லை. அவரைப் போன்றவருக்கு எதிராக எப்போதும் பேட்ஸ்மேன் ஒருகால் பின்னே வைப்பார்கள். இந்தக் குழந்தை காயமடையாமல் ஆஸ்திரேலியாவில் விளையாட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். மயங், சிராஜ், ஷமி, சிராஜ் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் அசத்துவார்கள்” என்று கூறினார்.



