வேறு எந்த அணியும் தொடாத உச்சம் – ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று உலகசாதனை படைத்த இந்தியா

India Dhawan
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா தொடரை வெல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அக்டோபர் 9ஆம் தேதியன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 278/7 ரன்கள் சேர்த்தது. டீ காக் 5, ஜானெமன் மாலன் 25, க்ளாஸென் 30, டேவிட் மில்லர் 35* என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ரீசா ஹென்றிக்ஸ் 74 (76) ரன்களும் ஐடன் மார்க்ரம் 79 (89) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Ishan-Kishan

- Advertisement -

அதை தொடர்ந்து 279 ரன்களை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் ஷிகர் தவான் 13, சுப்மன் கில் 28 என தொடக்க வீரர்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர். அதனால் 48/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 161 ரன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்த இஷான் கிசான் – ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றிபெறச் செய்தனர்.

இந்தியாவின் உலகசாதனை:
அதில் அதிரடி காட்டிய இஷான் கிசான் 4 பவுண்டரி 7 சிக்சருடன் 93 (84) ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அட்டகாசமாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 15 பவுண்டரியுடன் சதமடித்து 113* (111) ரன்கள் விளாசினார். இறுதியில் சஞ்சு சாம்சன் 30* (36) ரன்கள் எடுத்ததால் 45.5 ஓவரில் 282/3 ரன்களை எடுத்த இந்தியா வாழ்வா – சாவா என்றமைந்த இப்போட்டியில் வாழ்வை கண்டு 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் சாய்ந்து விடமாட்டோம் என்ற வகையில் தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

Shreyas IND vs SA Sanju Samson Shreyas Iyer

முன்னதாக இப்போட்டியில் 279 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300வது முறையாக எதிரணி நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300 போட்டிகளில் வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற உலகின் வேறு எந்த அணிகளாலும் தொட முடியாத உச்சத்தைத் தொட்டுள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. சொல்லப்போனால் இந்தியாவின் இந்த வரலாற்றுச் சாதனையை வேறு எந்த அணியும் அவ்வளவு எளிதில் உடைத்து விட முடியாது என்றே கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் இப்பட்டியலில் இந்தியாவை எதிரணிகள் நெருங்க முடியாத அளவுக்கு ஆஸ்திரேலியா 257 போட்டிகளில் வெற்றிகரமாக சேஸிங் செய்து 2வது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 237 போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக சேஸிங் செய்து இப்பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது. பொதுவாகவே சேசிங் அதாவது நிர்ணயிக்கப்படும் இலக்கை துரத்துவது பெரும்பாலான அனைவருக்கும் சவாலான காரியமாகும்.

INDIA Arshdeep Singh Harshal Patel

அதிலும் குறிப்பாக பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் போட்டிகளும் அல்லாமல் அதிரடி காட்ட வேண்டிய டி20 போட்டிகளும் அல்லாமல் இரண்டுக்கும் மத்தியில் நிற்கும் ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்வது மிகவும் கடினமாகும். இதில் 300+ இலக்காக இருந்தாலும் அதை எட்டுவதற்கு முதலில் நல்ல ஓபனிங் பார்ட்னர்ஷிப் தேவைப்படும். அதை விட மிடில் ஓவர்களில் நிதானமாகவும் கடைசி 10 ஓவர்களில் அதிரடியை காட்டினால் மட்டுமே வெற்றியை சுவைக்க முடியும்.

- Advertisement -

ஏனெனில் பெரிய இலக்கைத் துரத்தும் போது ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு விக்கெட்டை விட்டால் கூட மிகப் பெரிய அழுத்தம் உருவாகி ரன் ரேட்டை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி கிடைத்து விடும். எடுத்துக்காட்டாக இத்தொடரின் முதல் போட்டியில் 51/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இறுதிவரை அதிலிருந்து மீள முடியாமல் தோற்றது.

இதையும் படிங்க : சதத்தை தவறவிட்டது வருத்தம் தான். ஆனாலும் – சொந்த மைதானத்தில் விளையாடியது பற்றி பேசிய – இஷான் கிஷன்

அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் எனும் கலையில் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி போன்ற அழுத்தத்தை அற்புதமாக சமாளித்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்த தரமான பேட்ஸ்மேன்களை கொண்டிருந்த காரணத்தாலேயே இந்த உலக சாதனையை இந்தியா எளிதாக படைத்துள்ளது.

Advertisement