ஆஸியை மிஞ்சிய இந்தியா, ஐசிசி தரவரிசையில் ஆசிய அளவில் முதல் அணியாக புதிய உலகசாதனை – ரசிகர்கள் பெருமிதம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதன் வாயிலாக வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் இந்தியா பிரகாசப்படுத்தியுள்ளது. மறுபுறம் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்கும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

ஆனால் ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி கடுமையாக விமர்சித்த அந்த அணியினர் வாயில் பேசியதை செயலில் கொஞ்சம் கூட காட்டாமல் படுதோல்வியை சந்தித்தனர். குறிப்பாக 3வது நாள் உணவு இடைவெளியில் 2வது இன்னிங்சில் விளையாட துவங்கிய அந்த அணி தேநீர் இடைவெளிக்கு முன் 91 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. அதனால் டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் வென்று தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டது.

- Advertisement -

இந்தியன் உலகசாதனை:
ஆனால் அதற்கு முன்பாகவே அந்த அணி நம்பர் ஒன் இடத்தை இந்தியாவிடம் பறிகொடுத்துள்ளது. ஆம் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டிக்கு முன்பாக ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 2வது இடத்திலிருந்த இந்தியா இத்தொடரில் 2 போட்டிகளை வென்றால் ஆஸ்திரேலியாவை முந்தி முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்பிருந்தது. அந்த நிலையில் நடைபெற்ற முதல் போட்டியில் எதிர்பாராததை விட அற்புதமாக செயல்பட்டு இன்னிங்ஸ் வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலிய வைத்திருந்த முன்னிலை புள்ளிகள் அப்படியே இந்தியாவின் பக்கம் சாய்ந்துள்ளது.

அதன் வாயிலாக நாக்பூர் போட்டிக்கு பின் ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் 115 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 2016 – 2021 வரை ஏற்கனவே விராட் கோலி தலைமையில் நம்பர் ஒன் அணியாக இருந்த இந்தியா அவர் விலகிய பின் சில தோல்விகளை சந்தித்ததால் ஆஸ்திரேலியா அந்த இடத்தை பிடித்துக் கொண்டது.

- Advertisement -

ஆனால் தற்போது மீண்டும் அபாரமாக செயல்பட்டு முதலிடத்தை தன்வசமாக்கியுள்ள இந்தியா கடந்த ஜனவரி மாதம் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் நியூசிலாந்தை முந்தி நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. மேலும் 2022ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு 2016க்குப்பின் முதல் முறையாக ஐசிசி டி20 தரவரிசையிலும் முதலிடம் பிடித்த இந்தியா ஏற்கனவே உலகின் நம்பர் ஒன் டி20 அணியாகவும் ஜொலித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையிலும் ஒரே நேரத்தில் இந்தியா நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கிறது. இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் 3 வகையான போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை அடைந்த முதல் ஆசிய அணி என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இதையும் படிங்க: 100 டெஸ்ட் போட்டிக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்த புஜாரா – நரேந்திர மோடி என்ன சொல்லியிருக்காரு பாருங்க

மேலும் ஒரே நேரத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த அணி என்ற தென் ஆப்பிரிக்காவின் உலக சாதனையையும் இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 2014ஆம் ஆண்டு முதலும் கடைசியாக தென்னாப்பிரிக்கா தான் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே நேரத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தது. அதன் பின் தற்போது அந்த உலக சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு இந்திய ரசிகர்களுக்கு பெருமையை சேர்த்துள்ளது என்றே சொல்லலாம்.

Advertisement