டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனையின் உச்சம் தொட்ட இந்திய அணி – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணியை வொயிட்வாஷ் செய்தது மட்டுமில்லாமல் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.

Ind

- Advertisement -

அந்த சாதனையை யாதெனில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்று தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற சாதனையாக வைத்திருந்தது. ஆனால் அதனை தற்போது இந்திய அணி முறியடித்து டெஸ்ட் போட்டியில் நாங்கள் தான் நம்பர் 1 என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

அதன்படி இந்திய அணி தனது சொந்த மண்ணில் கடைசியாக 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்பிறகு தற்போது 2013-ல் இருந்து தற்போது வரை 11 டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கிட்டதட்ட ஏழு ஆண்டுகளாக நாம் எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இந்திய மண்ணில் இழந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

IND

இதன்மூலம் 11 டெஸ்ட் தொடர்களை வென்று சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அணி என்ற மிகப்பெரிய சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதில் இரண்டு தொடர்களுக்கு தோனி கேப்டனாகவும், 8 டெஸ்ட் தொடர்களுக்கு கோலி கேப்டனாகவும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு தொடரில் ரஹானே கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement