மகளிர் டி20 உ.கோ : தீப்தி புதிய வரலாற்று சாதனை, பினிஷராக மிரட்டும் ரிச்சா – வெ.இ.ஸை தூளாக்கிய இந்தியா

Womens Team
- Advertisement -

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக தென்னாபிரிக்காவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட உலகின் டாப் 16 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்தியா குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. அதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி துவங்கிய இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா மகளிர் டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்த ஆசிய அணியாக சாதனை படைத்தது.

அந்த வகையில் மிகச் சிறந்த வெற்றியுடன் இத்தொடரை துவக்கிய இந்தியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தன்னுடைய 2வது லீக் போட்டியில் களமிறங்கியது. கேப் டவுன் நகரில் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் ஹேய்லே மேத்தியூஸ் 2 (6) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

அசத்திய இந்தியா:
இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நட்சத்திர வீராங்கனை ஸஃபானி டெய்லர் 6 பவுண்டரியுடன் 42 (40) ரன்களும் கேம்பேல் 30 (36) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அதை பயன்படுத்திய இந்தியா கடைசி நேரத்தில் ஹென்றி 2, கஜ்நபி 15, பிளட்சர் 2 என முக்கிய வீராங்கனைகளை சொற்ப ரன்களில் காலி செய்தது. இறுதியில் நேசன் 21* (18) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 118/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்த தீப்தி சர்மா ஆடவர் மற்றும் மகளிர் என அனைத்து வகையான சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் சேர்த்து 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. தீப்தி சர்மா : 100*
2. பூனம் யாதவ் : 98
3. யுஸ்வேன்ற சஹால் : 91
4. புவனேஸ்வர் குமார் : 90
5. ரவிச்சந்திரன் அஸ்வின் : 72

- Advertisement -

அதை தொடர்ந்து 119 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு 3.3 ஓவரில் 32 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்மிருதி மந்தனா 2 பவுண்டரியுடன் 10 (7) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்கர்ஸ் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த சில ஓவர்களிலேயே மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 5 பவுண்டரியுடன் 28 (23) ரன்களில் அவுட்டானதால் பின்னடைவை சந்தித்த இந்திய அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரித் கௌர் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

அவருடன் ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் வீராங்கனை ரிச்சா கோஸ் அதிரடியாக விளையாடி ரன் ரேட்டை எகிற விடாமல் பார்த்துக் கொண்டதால் இந்தியா வெற்றியை நெருங்கியது. இருப்பினும் கடைசி நேரத்தில் 5வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் அமைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 33 (42) ரன்களில் அவுட்டானலும் மறுபுறம் அதிரடி காட்டிய ரிச்சா கோஸ் 5 பவுண்டரியுடன் 44* (32) ரன்களை விளாசி சிறப்பான பினிஷிங் கொடுத்தார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும் அதிரடியாக 31* (20) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அதனால் 18.1 ஓவரிலேயே 119/4 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பையில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தீப்தி சர்மா ஆட்ட நாயகி விருதை வென்றார்.

இதையும் படிங்க: இந்திய அணிக்கு எதிரா ஆஸ்திரேலியா இதை மட்டும் பண்ணவே முடியாது – சைமன் டவுல் ஓபன்டாக்

மேலும் இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் குரூப் பி பிரிவில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ள இந்தியா தன்னுடைய அடுத்த 2 போட்டிகளில் 1 வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு தாராளமாக தகுதி பெற்று விடலாம் என்ற நல்ல நிலைமைக்கு வந்துள்ளது. அதனால் கடந்த மாதம் இதே தென்னாபிரிக்காவில் ஷபாலி வர்மா தலைமையில் அண்டர்-19 உலக கோப்பையை வென்றது போல் இந்த கோப்பையையும் இந்தியா வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement