- Advertisement -
இந்திய கிரிக்கெட்

10 விக்கெட்ஸ்.. ஃபாலோ ஆன் பெற்று போராடிய தெ.ஆ அணியை வீழ்த்தி.. உலக சாதனை படைத்த இந்தியா

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி ஜூன் 28ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அபாரமாக விளையாடி 603/6 ரன்கள் குவித்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அதன் வாயிலாக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் இந்தியா உலக சாதனை படைத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா சதமடித்து 149, ஷபாலி வர்மா அதிவேகமாக இரட்டை சதமடித்த வீராங்கனையாக உலக சாதனை படைத்து 205 (197) ரன்களும் குவித்தனர். அவர்களுடன் ஜெமிமா 55, கேப்டன் ஹர்மன்பிரீத் 69, ரிச்சா கோஸ் 86 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

சாதனை வெற்றி:
தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக டெல்மி டுக்கர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே தடுமாறி இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது. அதிகபட்சமாக சுனே லஸ் 65, மாரிசன் காப் 74 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக இளம் வீராங்கனை ஸ்னே ராணா 8 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய ஸ்பின்னராகவும் அவர் சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணிக்கு இந்தியா ஃபாலோ ஆன் கொடுத்தது. அதன் காரணமாக மீண்டும் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மூச்சுடன் போராடியும் 2வது இன்னிங்ஸில் 373 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு கேப்டன் லாரா நங்கூரமாக விளையாடி சதமடித்து 122 (314) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அவருடன் சேர்ந்து விளையாடிய சுனே லஸ் சதமடித்து 109 ரன்கள் விளாசினார். ஆனால் மிடில் ஆர்டரில் டீ கிளார்க் 61 ரன்கள் எடுத்ததை தவிர்த்து இதர வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா 2, தீப்தி சர்மா 2, ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியில் 37 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுபா சதீஷ் 13*, ஷபாலி வர்மா 24* ரன்கள் எடுத்தனர்.

இதையும் படிங்க: விராட் கோலி இன்னைக்கு இவ்ளோ புகழோடு டி20-ல இருந்து ஓய்வுபெற தோனி தான் முக்கிய காரணம் – உமர் அக்மல் பகிர்வு

அதனால் 37/0 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்ற இந்தியா சொந்த மண்ணில் கோப்பையை வென்றது. இது போக ஏற்கனவே கடந்த 2002ஆம் ஆண்டு பார்ல் நகரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இதன் வாயிலாக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. இதற்கு முன் உலகளவில் ஆஸ்திரேலியா 1 முறை மட்டுமே 10 விக்கெட் வித்தியாசத்தில் (1991ஆம் ஆண்டு இந்தியாவுக்

- Advertisement -