ஐசிசி மகளிர் டி20 உ.கோ: 106 ரன்ஸ்.. பாகிஸ்தானை அடக்கிய இந்தியா.. கடமையை மட்டுமே செய்ததால் ரசிகர்கள் கோபம்

IND vs PAK
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் ஐசிசி மகளிர் 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் அக்டோபர் ஆறாம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு 7வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு குல் பெரோசா 0, சிட்ரா அமின் 8, சோஹைல் 3, முனிபா அலி 17, அலியா ரியாஸ் 4 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 52-5 என தடுமாறிய பாகிஸ்தானுக்கு மிடில் ஆர்டரில் நிதா தார் இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சில் நிதானமாக விளையாடி 28 (34) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அதே போல கேப்டன் பாத்திமா சானா 13 (8), அரூப் ஷா 14* (17) ரன்கள் மட்டுமே எடுத்தனர். இறுதியில் நஸ்ரா சந்து 6* (2) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் பாகிஸ்தான் போராடி 105-8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக அருந்ததி ரெட்டி 3, ஷ்ரேயங்கா பாட்டில் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு மந்தனா 7 (16) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் இரண்டாவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷபாலி வர்மா 32 (35) ரன்களும் ஜெமிமா ரோட்ரிகஸ் 23 (28) ரன்களும் குவித்து அவுட்டானார்கள். இறுதியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் 29* (24) தீப்தி சர்மா 7*, சஞ்சனா 4* (1) ரன்கள் எடுத்ததால் 18.5 ஓவரில் இந்தியா 108-4 ரன்கள் எடுத்தது. அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி பரம எதிரி பாகிஸ்தானிடம் விட்டுக் கொடுக்காமல் போராடி வென்று ரசிகர்களை தலைநிமிர வைத்தது.

- Advertisement -

சுமாரான ரன்ரேட்:

இருப்பினும் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் ரன்ரேட்டை உயர்த்த இப்போட்டியில் வெறும் 107 ரன்களை சேசிங் செய்த இந்தியா அதிரடியாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதற்காக கொஞ்சமும் முயற்சிக்காத இந்திய வீராங்கனைகள் கடமைக்காக விளையாடி எப்படியோ வெற்றியை பெற்று 2 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: முதல் வங்கதேச டி20.. வருண் சக்ரவர்த்தி 3 வருட கம்பேக்.. 2 வீரர்கள் அறிமுகம்.. இந்திய பிளேயிங் லெவன்

அதனால் இப்போதும் இந்தியாவின் ரன்ரேட் (-1.217) கூடுதலாக மாறவில்லை என்பது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக செமி ஃபைனல் செல்ல இலங்கை மற்றும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் இந்தியா பெரிய வெற்றிகளை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் வென்றாலும் இப்போட்டியில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக கேப்டன் ஃபாத்திமா சானா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement