முதல் வங்கதேச டி20.. வருண் சக்ரவர்த்தி 3 வருட கம்பேக்.. 2 வீரர்கள் அறிமுகம்.. இந்திய பிளேயிங் லெவன்

Suryarkumar
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி களமிறங்கியுள்ளது.

அந்தத் தொடரின் முதல் போட்டி அக்டோபர் ஆறாம் தேதி இரவு 7 மணிக்கு குஜராத் மாநிலத்தில் இருக்கும் குவாலியர் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் இந்திய அணியில் மயங் யாதவ் மற்றும் நித்திஷ் ரெட்டி ஆகியோர் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

- Advertisement -

அறிமுகமான 2 வீரர்கள்:

அதில் கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான மயங் யாதவ் தொடர்ந்து 155கி.மீ வேகத்தில் பந்து வீசினார். நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி மிரட்டலாக பந்து வீசிய அவர் தனது முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்தார். ஆனால் அதன் பின் காயத்தை சந்தித்த அவர் தற்போது மீண்டும் குணமடைந்துள்ளதால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அதே போல 2024 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக நித்திஷ் ரெட்டி அறிமுகமானார். அந்த வாய்ப்பில் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய அவர் அவ்வப்போது பகுதி நேர பவுலராக பந்து வீசி அசத்தினார். அதனால் ஹைதராபாத் ஃபைனல் செல்ல உதவிய அவர் கடந்த ஜிம்பாப்வே டி20 தொடரில் தேர்வாகி கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

இந்திய அணி:

தற்போது குணமடைந்துள்ளதால் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ள அவரும் இந்தியாவுக்காக களமிறங்கியுள்ளார். அதே போல 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்ல உதவிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் 3 வருடங்கள் கழித்து இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். இது பற்றி கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: ட்ரெண்ட்செட்டர் முக்கியம்.. தோனி, கோலி, ரோஹித் ஆகியோரில் சிறந்த இந்திய கேப்டன் யார்? கிறிஸ் கெயில் பதில்

“நாங்கள் முதலில் பந்து வீச உள்ளோம். மிகவும் ஈரமான சூழ்நிலையில் பிட்ச் மாறாது என்று நினைக்கிறேன். இந்திய அணியில் நிறைய திறமை இருக்கிறது. நிறைய ரசிகர்கள் கூடியிருக்கும் இங்கே விளையாட ஆர்வோடுத்துடன் உள்ளோம். திலக், பிஸ்னோய், ராணா, ஜிதேஷ் விளையாடவில்லை” என்று கூறினார். இந்திய அணி: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (கீப்பர்), சூரியகுமார் யாதவ், நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங் யாதவ்.

Advertisement