எமெர்ஜிங் ஆசிய கோப்பை: 7 ரன்ஸ்.. திமிர் காட்டிய பாகிஸ்தான் வீரர்.. கடைசி ஓவரில் இந்தியா திரில் வெற்றி

IND vs PAK
- Advertisement -

ஓமனில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான 2024 ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. அதில் அக்டோபர் 19ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு 4வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அபிஷேக் ஷர்மா 35 (22) ரன்களில் அவுட்டானார். குறிப்பாக தூக்கி அடிக்க முயற்சித்த அவர் கேட்ச் கொடுத்து அவுட்டானதால் ஏமாற்றத்துடன் பெவிலியனை நோக்கி நடந்தார்.

- Advertisement -

திமிரான பாகிஸ்தான் வீரர்:

ஆனால் அப்போது அவரை அவுட்டாக்கிய பாகிஸ்தான் வீரர் சூபியன் முகிம் “வெளியே போ” என்ற வகையில் ஆக்ரோசமாக வழியனுப்பியது இந்திய ரசிகர்களை கடுப்பாக்கியது. அதனால் கோபமடைந்த அபிஷேக் சர்மா அவருக்கு பதிலடி கொடுப்பதற்காக சென்றார். இருப்பினும் சண்டை வருவதற்குள் உள்ளே புகுந்த நடுவர் அபிஷேக் ஷர்மாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 36 (19) ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் கேப்டன் திலக் வர்மா கொஞ்சம் நிதானமாக விளையாடி 44 (35), நேஹல் வதரே 25 (22) ரன்கள் எடுத்தனர். இறுதியில் ஆயுஷ் படோனி 2, நிஷாந்த் சிந்து 6 ரன்களில் அவுட்டானாலும் ரமந்தீப் சிங் 17 (11) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 183-8 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்தியா த்ரில் வெற்றி:

பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சூபியன் முகிம் 2 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 184 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் முகமது ஹாரிஸ் 6, ஒமைர் யூசுப் 2 ரன்களில் அன்சுல் கம்போஜ் வேகத்தில் அவுட்டானார்கள். ஆனால் மிடில் ஆடரில் காசிம் அக்ரம் 27 (21), அர்பாத் 41 (29) ரன்களை அதிரடியாக அடித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.

அதனால் அன்சுல் கம்போஜ் வீசிய கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரின் முதல் பந்திலேயே இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்த அப்துல் சமதை 25 (15) ரன்களில் காலி செய்த கம்போஜ் மேற்கொண்டு 9 ரன்கள் மட்டுமே வழங்கினார். அதனால் 20 ஓவரில் பாகிஸ்தானை 176-7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: விராட் கோலி விக்கெட் ஸ்பெஷல்.. இது நடக்கலன்னா இந்தியாவின் தோல்வியை நிறுத்த முடியாது.. வில்லியம் பேட்டி

இந்திய அணிக்கு அன்சுல் கம்போஜ் 3, ரசிக் சலாம், நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா குரூப் பி பிரிவில் 2 புள்ளிகளை பெற்று இத்தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

Advertisement