- Advertisement -
இந்திய கிரிக்கெட்

44 ரன்ஸ்.. நியூஸிலாந்தை சுருட்டிய வருண்.. 2013க்குப்பின் அபார சாதனை.. செமி ஃபைனலில் ஆஸியை சந்திக்கும் இந்தியா

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மார்ச் இரண்டாம் தேதி துபாயில் கடைசி லீக் போட்டி நடைபெற்றது அதில் செமி ஃபைனலுக்கு ஏற்கனவே தகுதி பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 15, கில் 2, விராட் கோலி 11 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 30-3 என ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறிய போது 4வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அக்சர் படேல் 42 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா போராட்டம்:

மறுபுறம் அவருடன் இணைந்து விளையாடிய ஸ்ரயாஸ் ஐயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தை அடித்து 79 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த கேஎல் ராகுல் 23, ரவீந்திர ஜடேஜா 16 ரன்னில் அவுட்டானார்கள். இருப்பினும் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 45 (45) ரன்கள் குவித்து ஓரளவு நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் இந்தியா போராடி 50 ஓவரில் 249-9 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும். பின்னர் 250 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு ரச்சின் ரவீந்தரா 6 ரன்னில் பாண்டியா வேகத்தில் அக்சர் படேல் அபார கேட்ச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக வந்த நம்பிக்கை நாயகன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் நங்கூரமாக விளையாட முயற்சித்த வில் எங்கை 22 ரன்களில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி போல்ட்டாக்கினார்.

- Advertisement -

வருண் அபாரம்:

அடுத்ததாக வந்த டேரில் மிட்சேல் 17, டாம் லாதம் 14 ரன்களில் குல்தீப், ஜடேஜா சுழலில் சிக்கினார்கள். அடுத்ததாக வந்த கிளன் பிலிப்ஸ் 12, மைக்கேல் பிரேஸ்வெல் 2 ரன்னில் வருண் சுழலில் சிக்கினார்கள். அடுத்த சில ஓவரில் மறுபுறம் போராடிய வில்லியம்சன் அரை சதத்தை அடித்த போதிலும் 81 ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்யாமல் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் கேப்டன் சான்ட்னர் 28 ரன்கள் எடுத்தும் 45.3 ஓவரில் 205 ரன்களுக்கு நியூசிலாந்தை சுருட்டிய இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் வாயிலாக 2013 ரவீந்திர ஜடேஜாவுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபியில் 5 விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்திய ஸ்பின்னர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதையும் படிங்க: விராட் கோலியின் இந்த வெறிதான் இன்னைக்கு அவரை இவ்வளவு பெரிய லெஜன்ட்டா மாத்தியிருக்கு – கவாஸ்கர் புகழாரம்

அதனால் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்ற இந்தியா குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்தது. எனவே மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் முதல் செமி ஃபைனலில் குரூப் ஏ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தகுதி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணியை நியூசிலாந்து எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -