விராட் கோலியின் இந்த வெறிதான் இன்னைக்கு அவரை இவ்வளவு பெரிய லெஜன்ட்டா மாத்தியிருக்கு – கவாஸ்கர் புகழாரம்

Gavaskar
- Advertisement -

இந்தியா அணிக்காக 19 வயது உட்பட்டோர் உலகக் கோப்பையில் விளையாடி கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான விராட் கோலிக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2008-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர் இதுவரை 299 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 51 சதம் மற்றும் 73 அரைசதம் என 14,085 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

விராட் கோலி இவ்வளவு பெரிய உயரத்திற்கு வர இதுதான் காரணம் : கவாஸ்கர்

மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து சர்வதேச போட்டிகளில் மாபெரும் பல சாதனைகளின் நிகழ்த்தியுள்ள அவர் இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடி வருகிறார். இது விராட் கோலியின் 300-வது சர்வதேச ஒருநாள் போட்டியாக அமைந்துள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக விராட் கோலிக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலி பாராட்டி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறுகையில் : விராட் கோலி கிரிக்கெட்டில் ஒரு மாணவராக இருந்து கிரிக்கெட் ஆசிரியராக மாறி தற்போது கிரிக்கெட் பல்கலை கழகத்தின் வேந்தராக உயர்ந்துள்ளார்.

அவரிடம் இருந்து இளம் வீரர்கள் பல்வேறு விடயங்களை அருகில் அமர்ந்து கற்றுக் கொள்ள முடியும். எப்போதுமே அவர் ரன் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் களத்தில் பீல்டிங்கிலும் அற்புதமாக செயல்படுகிறார். குறிப்பாக ரன்களை தடுக்க டைவ் அடிப்பது, தன்னிடம் வந்த பந்துகளை வெகுவிரைவாக விக்கெட் கீப்பருக்கோ அல்லது பவுலருக்கோ அடிப்பது, பவுலருக்கு ஆதராவாக நின்று அம்பயரிடம் விக்கெட்டுகளை கேட்பது என பேட்டிங் மட்டும் இன்றி போட்டி முழுவதுமே முழு கவனத்துடனும், முழு அர்ப்பணிப்புடன் விளையாடி வருகிறார்.

- Advertisement -

அதனால் தான் அவரால் ஒவ்வொரு போட்டியிடும் சிறப்பாக செயல்பட முடிகிறது. நேற்றை விட இன்று சிறப்பாக விளையாட வேண்டும் என்று ஒவ்வொரு போட்டிக்கும் அவர் பெரிய அளவில் உழைப்பை வெளிப்படுத்துகிறார். கிரிக்கெட்டில் நிறைய சாதித்து விட்டோம் என்ற எண்ணம் இல்லாமல் ஒவ்வொரு போட்டியையும் புதிதாக பார்க்கும் அவர் புதியதாக மேலும் சாதனையை நிகழ்த்த விரும்புகிறார்.

இதையும் படிங்க : இந்தியா அணிக்கெதிராக முதல் வீரராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

கிரிக்கெட்டின் மீதுள்ள அவரது அர்ப்பணிப்புதான் அவரை இவ்வளவு பெரிய வீரராக மாற்றி உள்ளது. இந்திய அணிக்காக போட்டிகளை வென்று தரவேண்டும் என்று அவர் போடுகிற உழைப்பு தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது என கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement