82 ரன்ஸ்.. சுயநலமின்றி தமிழக வீராங்கனையிடம் பெருந்தன்மை காட்டிய மந்தனா.. நேபாளை வீழ்த்திய இந்தியா

IND vs NEP
- Advertisement -

இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களுடைய மூன்றாவது போட்டியில் நேபாள் அணியை எதிர்கொண்டது. ஜூலை 23ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கி அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

குறிப்பாக அப்போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் ஓய்வு எடுத்தார். அதனால் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். ஆனால் கேப்டனாக வந்ததுமே மந்தனா தம்முடைய ஓப்பனிங் இடத்தை மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த தமிழக வீராங்கனை ஹேமலதாவுக்கு பெருந்தன்மையுடன் கொடுத்து சுயநலமின்றி நடந்து கொண்டார்.

- Advertisement -

இந்தியா ஹாட்ரிக் வெற்றி:
அந்த வாய்ப்பை பயன்படுத்திய ஹேமலதா ஓப்பனிங்கில் சபாலி வர்மாவுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதில் ஹேமலதா நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புகளும் அதிரடியாக விளையாடிய ஷபாலி அரை சதமடித்து இந்தியாவை வலுப்படுத்தினார். அந்த வகையில் 122 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் ஹேமலதா 47 (42) ரன்களில் அவுட்டானார்.

அடுத்த சில ஓவரில் மறுபுறம் அதிரடி காட்டிய ஷபாலி வர்மா 12 பவுண்டரி ஒரு சிக்சருடன் 81 (48) ரன்கள் குவித்து அவுட்டானார். இதன் வாயிலாக மகளிர் ஆசிய கோப்பையில் 20 வயது நிரம்புவதற்குள் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீராங்கனை என்ற சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் இதே தொடரில் அமீரக அணிக்கு எதிராக இந்தியாவின் ரிச்சா கோஸ் 64* ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து மிடில் ஆர்டரில் சஞ்சனா 10 (12) ரன்களில் அவுட்டானாலும் ஜெமிமா ரோட்ரிகஸ் அதிரடியாக 28* (15) ரிச்சா கோஸ் 6* (3) ரன்கள் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் இந்தியா 178/3 ரன்கள் எடுத்தது. நேபாள் சார்பில் அதிகபட்சமாக சீதா ராணா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 179 ரன்களை துரத்திய நேபாள் எதிர்பார்த்ததை போலவே இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறியது.

இதையும் படிங்க: வெகுவிரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு.. ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளராக மாற இருக்கும் டிராவிட் – எந்த அணிக்கு தெரியுமா?

அந்த வகையில் தடுமாற்றமாகவே விளையாடி விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 20 ஓவரில் 96/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சீதா ராணா மகர் 18, பிந்து ராவல் 17* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 3, ராதா யாதவ் 2, அருந்ததி ரெட்டி 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 போட்டிகளில் மூன்று

Advertisement