ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 20ஆம் தேதி அமெரிக்காவில் துவங்க உள்ளது. அதில் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்தை தங்களுடைய பயிற்சி போட்டியில் எதிர்கொண்டது. அப்போட்டி ஜூன் ஒன்றாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற சஞ்சு சாம்சன் 1 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். அவருடன் எதிர்புறம் சேர்ந்து நிதானமாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 23 (19) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தியா வெற்றி:
அந்த நிலையில் வந்த சூரியகுமார் யாதவுடன் கோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மிகச் சிறப்பாக விளையாடி 4 பவுண்டரி 4 சிக்சருடன் 53 ரன்கள் குவித்து அடுத்த வீரருக்கு வழி விட்டு வெளியேறினார். ஆனால் அடுத்ததாக வந்த சிவம் துபே 14 (16) ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த சில ஓவரிலேயே சூரியகுமார் யாதவும் 4 பவுண்டரியுடன் 31 (18) ரன்னில் அவுட்டானார்.
இறுதியாக மிடில் ஆர்டரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்திய ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரின் 4 சிக்சருடன் 40* (23) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் இந்தியா 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் தொடர்ந்து 183 ரன்களை துரத்திய வங்கதேச அணிக்கு சௌமியா சர்க்காரை டக் அவுட்டாக்கிய அர்ஷ்தீப் சிங் அடுத்ததாக வந்த லிட்டன் தாஸை 6 (8) ரன்னில் கிளீன் போல்ட்டாக்கினார்.
அடுத்ததாக வந்த கேப்டன் சான்டோ பந்துகளில் சிராஜ் வேகத்தில் டக் அவுட்டானார். அதனால் 10/3 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணிக்கு நங்கூரமாக விளையாட முயற்சித்த தவ்ஹீத் ஹ்ரிடாய் 13 (14) ரன்னில் அக்சர் படேல் சுழலில் அவுட்டானார். போதாக்குறைக்கு மறுபுறம் திணறிய மற்றொரு துவக்க வீரர் தன்சித் ஹசன் 17 (18) ரன்களில் பாண்டியா வேகத்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஷாகிப் அல் ஹசன் – முகமதுல்லா ஆகியோர் நங்கூரமாக விளையாடினர்.
அதில் கொஞ்சம் அதிரடியாக விளையாடிய முகமதுல்லா 40 (28) ரன்கள் அடித்து அடுத்த வீரருக்கு வழி விட்டார். ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய சாகிப் 28 (34) ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டானார். இறுதியில் 20 ஓவரில் வங்கதேசம் 122/9 மட்டுமே எடுத்தது. அதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், சிவம் துபே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். குறிப்பாக பாண்டியா 1 விக்கெட்டும் சிவம் துபே 3 ஓவரில் 11 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையும் படிங்க: 182 ரன்ஸ்.. 6, 6, 6.. வாய்ப்பை கோட்டை விட்ட சாம்சன்.. அசத்திய பண்ட்.. வங்கதேசத்திடம் மாஸ் காட்டிய பாண்டியா
அந்த வகையில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் பந்து வீசி அசத்தியதால் இந்தியாவின் முக்கிய பிரச்சினை தீர்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே போல விக்கெட் கீப்பராக யார் விளையாடுவார் என்ற தெளிவும் கிடைத்துள்ளது.



