கடைசி ஓவரில் 3 விக்கெட்.. அசத்திய ஸ்கை, இஷான் கிசான்.. பரபரப்பில் ரிங்கு சிங் தில்லாக ஆஸியை சாய்த்தது எப்படி?

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் 13 ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த ஜோஸ் இங்லீஷ் அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் நிதானத்தை காட்டிய ஸ்டீவ் ஸ்மித் 2வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது 52 ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்லீஷ் 18 பவுண்டர் 8 சிக்ஸருடன் சதமடித்து 110 (50) ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இறுதியில் ஸ்டோனிஸ் 7*, டிம் டேவிட் 19* ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 208/3 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 209 ரன்களை துரத்திய இறுதியாக ஆரம்பத்திலேயே ருதுராஜ் கைக்வாட் தவறாக ஓடி ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்ற நிலையில் மறுபுறம் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 21 (8) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அதனால் 22/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி வெற்றிக்கு போராடினார்கள். அந்த வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 13 ஓவர்கள் வரை நின்று 3வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது இஷான் கிசான் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 58 (38) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து ஆஸ்திரேலிய பவுலர்களை அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி அசத்தலாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரை சதம் கடந்து வெற்றியை உறுதி செய்து 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 80 (42) ரன்கள் விளாசி அவுட்டானார். அந்த நிலைமையில் ரிங்கு சிங் தில்லாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த அக்சர் படேல் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இதையும் படிங்க: கடைசி ஓவரில் 3 விக்கெட்.. அசத்திய ஸ்கை, இஷான் கிசான்.. பரபரப்பில் ரிங்கு சிங் தில்லாக ஆஸியை சாய்த்தது எப்படி?

அதை விட அடுத்து வந்த ரவி பிஷ்னோய் 0, அர்ஷிதீப் சிங் 0 ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டது. அப்போது சீன் அபோட் வீசிய கடைசி பந்தை நோ பாலாக வீசிய போதிலும் ரிங்கு சிங் அற்புதமான சிக்சர் அடித்து 22* (14) ரன்கள் விளாசி இந்தியாவுக்கு 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று கொடுத்தார். அதனால் அதிகபட்சமாக தன்வீர் சங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் இந்தியா ஆரம்பத்திலே முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement