2 ஆவது டி20 போட்டி நடப்பதிலும் இப்போ புதுசா ஒரு சிக்கல் – விவரம் இதோ

IND

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டெல்லியில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்ட காரணத்தினால் நடக்குமா நடக்காதா என்று சந்தேகம் இருந்த நிலையில் ஒரு வழியாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

ban 1

இந்நிலையில் தற்போது 2வது டி20 போட்டியும் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணம் யாதெனில் கடந்த வாரம் உருவான மகா புயல் தற்போது அரபிக் கடலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டையூ டாமனில் இருந்து தென்மேற்கு பகுதியில் மையம் கொண்டிருந்தது. ஆனால் அது அந்த மகா புயல் தற்போது திடீரென திசைமாறி குஜராத் கடற்கரையை நோக்கி திரும்புகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி அதி தீவிர புயலாக மாறி வரும் மஹா புயல் 6ஆம் தேதி நள்ளிரவு அல்லது 7 ஆம் தேதி அதிகாலையில் குஜராத்தில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 7 ஆம் தேதி இந்திய அணி பங்களாதேஷ் அணியுடன் டி20 போட்டி நடைபெற உள்ளதால் இந்த போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று குஜராத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IND 1

அதனால் போட்டி நடைபெறாமல் போவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. இது குறித்து சௌராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கம் தெரிவித்ததாவது : தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறோம். மைதானத்தை முழுவதுமாக மூடி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சரியான நேரத்தில் போட்டி துவங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -