இந்தியாவிடம் ஸ்டார்கள் இருக்காங்க ஆனால் பும்ராவும் இல்ல பார்மும் இல்ல – முன்னாள் பாக் வீரர் அதிரடி

- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பை அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியது. உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிகராக அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதில் கடந்த 1992 முதல் நடைபெற்ற அத்தனை உலக கோப்பை போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியடையாமல் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா வீர நடை போட்டது.

INDvsPAK

- Advertisement -

ஆனால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வ வைத்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து வரலாற்றை மாற்றியது. அந்த நிலையில் அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் அதற்கு பழி தீர்த்தாலும் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் மீண்டும் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. எனவே அந்த தோல்விகளுக்கு இந்த உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா மீண்டும் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

பும்ரா, பார்ம் இல்ல:
ஆனால் ஆசிய கோப்பை தோல்வியால் பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியுள்ளது பெரிய சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் ஆசிய கோப்பையில் பைனல் வரை சென்று அசத்திய பாகிஸ்தானுக்கு காயத்தால் பங்கேற்காத ஷாஹீன் அப்ரிடி குணமடைந்து உலகக் கோப்பையில் களமிறங்க தயாராகி வருகிறார். கடந்த முறை ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவை தோற்கடிக்க முக்கிய பங்காற்றிய அவர் மீண்டும் வருவதால் அந்நாட்டவர்கள் இம்முறையும் பாகிஸ்தான் வெல்லும் என்று நம்புகின்றனர்.

IND Japrit Bumrah

இந்நிலையில் என்னதான் உலகத்தரம் வாய்ந்த சூப்பர் ஸ்டார் வீரர்களுடன் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக இருந்தாலும் தற்சமயத்தில் இந்தியா ஃபார்மில் இல்லை என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவேத் முதன்மை பவுலர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது அவர்களுக்கு மேலும் பின்னடைவு என கூறியுள்ளார். இருப்பினும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா போட்டியை மாற்றக்கூடிய திறமை பெற்றுள்ளதாகத் பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்சமயத்தில் இந்தியா இருக்கும் நிலைமையை வைத்து பார்க்கும் போது அவர்கள் நல்ல பார்மில் இல்லை. அவர்களுடைய பேட்டிங் தடுமாறுகிறது, மேலும் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் அவர்களிடம் ஷாஹீன் அப்ரிடி, ஹாரீஸ் ரவூப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை. ஏனெனில் தாக்கத்தை ஏற்படுத்தும் பந்து வீச்சாளர்கள் தான் எதிரணிக்கு அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். அது போன்ற பவுலர்கள் தான் போட்டியில் வித்தியாசத்தையும் ஏற்படுத்துவார்கள். அப்படி பார்க்கும் போது இந்திய அணியில் பெரும்பாலும் மித வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் அவர்களிடம் போட்டியில் எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய ஹர்திக் பாண்டியா உள்ளார்” என்று கூறினார்.

Aakib Javed

அவர் கூறுவது போல ஷாஹீன் அப்ரிடி, ஹாரீஸ் ரவூப், நசீம் ஷா போன்ற தொடர்ச்சியாக 140 கி.மீ வேகத்தில் வீசி தாக்கத்தை ஏற்படுத்தும் பவுலர்களை பாகிஸ்தான் கொண்டுள்ளது. மறுபுறம் இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் ஆகியோர் 130 கி.மீ வேகத்தில் மட்டும் வீசும் மித வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பதுடன் சமீபத்திய போட்டிகளில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி சுமாரான பார்மில் உள்ளனர்.

அதே பேட்டிங் துறையிலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டும் நல்ல பார்மில் இருக்கும் நிலையில் அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தடுமாற்றமான பார்மில் உள்ளனர். இதனால் பாகிஸ்தான் போட்டி உட்பட இந்த உலக கோப்பையில் அனைவரும் இணைந்து விளையாடினால் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement