ஐ.சி.சி வெளியிட்ட டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை – இந்திய ரசிகர்கள் செம ஹேப்பி – ஏன் தெரியுமா ?

Cup
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவிவரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் வருகிற அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானாலும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் சற்று குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த தொடரின் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

cup

- Advertisement -

அதில் சூப்பர் 12 சுற்று குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குரூப்பிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. அதில் குரூப் ஏ ஏவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளனர். குரூப் பி யில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளனர்.

மீதமுள்ள அணிகள் தகுதி சுற்றில் அடிப்படையில் இந்த தொடரில் பங்கேற்கும். இந்நிலையில் இந்த அணிகளுக்கான பட்டியல் வெளியானது முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை சேர்ந்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில் எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும்.

கடைசியாக 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இரு அணிகளும் மோதிக் கொண்டன. அதனைத் தொடர்ந்து விளையாடாமல் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஒரே பிரிவில் மோத உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement