விராட் கோலி மட்டுமல்ல சஞ்சு சாம்சனை கூட பாபர் அசாமால் தொட முடியாது, இந்தியா – பாக் வீரர்களின் சம்பள வித்யாசம்

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் டாப் அணியாக ஜொலித்து வரும் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்கு ஏ ப்ளஸ், ஏ, பி, சி ஆகிய 4 வகையான பிரிவுகளில் முறையே 7, 5, 3, 1 கோடி ரூபாய்கள் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 – 23 சீசனில் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கும் சராசரி போட்டிகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்கு இந்த 4 வகையான பிரிவில் பிசிசிஐ சமீபத்தில் சம்பள பட்டியலை அறிவித்தது. அதில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஏ ப்ளஸ் பிரிவில் அதிகபட்சமாக 7 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

அதே போல் ஒருநாள், டி20 போன்ற குறிப்பிட்ட வகையான கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் ரவிச்சந்திரன், அஸ்வின், ஹர்திக் பாண்டியா முகமது ஷமி, அக்சர் பட்டேல் ஆகியோருக்கு ஏ பிரிவில் தலா 5 கோடி ரூபாயும் புஜாரா போன்ற ஒரு வகையான அல்லது சற்று குறைவான போட்டிகளில் மட்டும் விளையாடும் வீரர்களுக்கு பி பிரிவில் 3 கோடி ரூபாயும் தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் போன்ற அவ்வப்போது கணிசமான போட்டிகளில் மட்டும் விளையாடும் வீரர்களுக்கு சி பிரிவில் தலா 1 கோடி ரூபாயும் சம்பளமாக பிசிசிஐ கொடுக்கிறது.

ஏணி வெச்சாலும்:
இந்நிலையில் இந்த சம்பளத்திற்கும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை விட மிகச் சிறந்த அணி என்றும் விராட் கோலியை விட பாபர் அசாம் போன்ற மகத்தான வீரர்களை கொண்டுள்ளோம் என்றும் அடிக்கடி மார்தட்டி பேசி வரும் பாகிஸ்தான் தங்களது வீரர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கும் ஏணி வச்சாலும் எட்டாத வித்தியாசம் இருக்கிறது. ஆம் இந்தியாவுக்கு முன்பாகவே 2022 – 23 சீசனில் தங்களது நாட்டுக்காக விளையாடும் வீரர்களுக்கு வெள்ளை பந்து – சிவப்பு நிற பந்து ஆகிய 2 வகையான முதன்மை பிரிவுகள் அடிப்படையிலான சம்பள ஒப்பந்த பட்டியலை பாகிஸ்தான் வெளியிட்டிருந்தது.

Babar-Azam-and-Virat-Kohli

அதன் அடிப்படையில் பாகிஸ்தானின் உச்சபட்ச நட்சத்திர வீரராகவும் கேப்டனாகவும் இருக்கும் பாபர் அசாமுக்கு 1.25 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் ஒரு மாதம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதாவது 12 மாதங்கள் அடங்கிய ஒரு வருடத்தில் இந்திய ரூபாயில் பாபர் அசாம் பாகிஸ்தானுக்கு விளையாடுவதற்காக 43,50,000 ரூபாய் சம்பளமாக பெறுகிறார். இது இந்தியாவுக்காக உச்சபட்சமாக ஏ ப்ளஸ் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வாங்கும் 7 கோடி சம்பளத்திற்கு 12 மடங்கு குறைவான சம்பளமாகும்.

- Advertisement -

சொல்லப்போனால் பாகிஸ்தான் வாரியத்தில் உச்சகட்ட சம்பள ஒப்பந்தத்தில் இருக்கும் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி, ஹசன் அலி ஆகியோர் வாங்கும் சம்பளம் இந்திய வாரியத்தின் மிகவும் குறைந்தபட்ச சம்பள பிரிவான சி பிரிவில் இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் வாங்கும் சம்பளத்தை விட பாதி குறைவாகும்.

VIrat Kohli IND vs PAK

அப்படி எந்த வகையிலும் ஏணி வச்சாலும் எட்டாத உயரத்தில் இருக்கும் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள் என்றும் இந்தியா நடத்தும் ஐபிஎல் தொடரை விட தாங்கள் நடத்தும் பிஎஸ்எல் தொடர் தான் உலகின் நம்பர் ஒன் டி20 தொடர் என்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே நிலவும் மக்கள் தொகை மற்றும் பொருளாதாரம் ஆகியவை இந்த சம்பள வித்தியாசத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

இதையும் படிங்க:என்னது? அப்போ இவர் கேப்டன் இல்லையா? ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்ட புகைப்படத்தால் – ரசிகர்கள் ஏமாற்றம்

ஆனால் அதற்காக எப்போதும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தங்களை விட பாகிஸ்தான் மட்டமான அணி என்று பெரும்பாலும் விமர்சிப்பதில்லை. இருப்பினும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தான் இந்தியாவை அவ்வாறு விமர்சிப்பது அந்நாட்டவர்களை இந்திய ரசிகர்கள் அனைத்து விஷயங்களிலும் கலாய்ப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

Advertisement