162க்கு ஆல் அவுட்.. வெ.இ அணியை அரை நாளில் சுருட்டி வீசிய இந்தியா.. 2019க்குப்பின் 2வது வேகமான சுருட்டல்

IND vs WI 162
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

அதைத் தொடர்ந்து ஆட்டத்தை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தக்நரேன் சந்திர்பால் ஆரம்பத்திலேயே சிராஜ் வேகத்தில் டக் அவுட்டானார். மறுபுறம் தடுமாறிய ஜான் கேம்பல் 8 ரன்னில் ஜஸ்ப்ரித் பும்ரா வேகத்தில் நடையைக் கட்டினார். அடுத்த சில ஓவரில் பிரண்டன் கிங்கை 13 ரன்னில் போல்டாக்கிய சிராஜ் மறுபுறம் நங்கூரமாக விளையாட முயற்சித்த அதனேஷை 12 ரன்னில் காலி செய்தார்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

அதனால் 42/4 என தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் சாய் ஹோப் – கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் நங்கூரமாக விளையாட முயற்சித்தனர். இருப்பினும் 48 ரன்கள் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ஷாய் ஹோப் 26 ரன்னில் குல்தீப் யாதவ் சுழலில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஜஸ்டின் கிரீஸ் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் போராடிய சேஸ் 24 ரன்னில் சிராஜ் வேகத்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த காரி பியர்ரி நங்கூரமாக விளையாட முயற்சித்த போதிலும் 11 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கினார். மறுபுறம் 32 ரன்கள் அடித்து போராடிய கிரீஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியை 150 ரன்கள் தாண்ட உதவிய போது பும்ரா வேகத்தில் போல்டானார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸை 44.1 ஓவரில் 162 ரன்களுக்கு 2 செஷனுக்குள் இந்தியா ஆல் அவுட்டானது.

- Advertisement -

2வது வேகமான சுருட்டல்:

இதன் வாயிலாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா எதிரணியை மிகவும் 2வது குறைந்த ஓவர்களில் ஆல் அவுட்டாக்கி அசத்தியுள்ளது. இதற்கு முன் 2019ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடியது. அந்தப் போட்டியில் வங்கதேசத்தை வெறும் 30.3 ஓவரில் இந்தியா ஆல் அவுட்டாக்கியதே முதல் குறைந்தபட்ச ஓவர்களாகும்.

இதையும் படிங்க: விராட் கோலியை தோளில் இடித்து சண்டையிட்டு திட்டுனேன்.. ஐபிஎல் சம்பளம் குறைந்த சமயம்.. பற்றி தவான்

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்திய அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 2, ஜஸ்ப்ரித் பும்ரா 3, முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் ஆட்டத்தை துவங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் பெரிய ரன்கள் குவித்து போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற முயற்சி செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement