90 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அரிதினும் அரிதாக நிகழ்ந்த நிகழ்வு – என்ன தெரியுமா?

Jadeja-1
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மொஹாலியில் துவங்கி நடைபெற்று வருகிறது. சொந்த மண்ணில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற புதிய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதை அடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு கேப்டன் ரோகித் சர்மா 29 ரன்கள் மற்றும் மயங்க் அகர்வால் 33 ரன்கள் என ஓரளவு சுமாரான தொடக்கத்தை அளித்தார்கள்.

mayank

- Advertisement -

அதைத் தொடர்ந்து 100வது போட்டியில் களமிறங்கி சாதனை படைத்த விராட் கோலி சதமடித்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 45 ரன்களில் அவுட்டானார். அவருடன் விளையாடிய ஹனுமா விஹாரி 58 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 27 ரன்களில் அவுட்டானார்.

மிரட்டிய இந்தியா:
இதனால் 175/4 என்ற நிலையில் இந்தியா தடுமாறியபோது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடினார்கள். இதில் ஒருபுறம் ஜடேஜா நிதான பேட்டிங்கை கடைப்பிடிக்க மறுபுறம் சரவெடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 97 பந்துகளில் 96 ரன்கள் குவித்த வேளையில் அவுட்டானதால் சதம் அடிக்கும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டார்.

pant 1

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜாவுடன் களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன் பங்கிற்கு பொறுப்பான 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா சதம் விளாசி 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 175* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா தனது முதல் இன்னிங்சை 574/8 ரன்களை எடுத்திருந்த போது கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

வலுவான நிலையில் இந்தியா:
பந்துவீச்சில் சொதப்பிய இலங்கை வீரர்கள் பேட்டிங்கிலாவது ஜொலிப்பார்களா என எதிர்பார்த்த அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனெனில் அந்த அணியின் கேப்டன் கருணாரத்னே 28 ரன்களும் நட்சத்திர அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்களும் எடுத்திருந்த நிலையில் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தார்கள்.

Jadeja

இந்த முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானதால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 108/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இலங்கை இந்த போட்டியில் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. மறுபுறம் பேட்டிங் போலவே அபாரமாக பந்து வீசி வரும் இந்தியா 466 ரன்கள் முன்னிலை பெற்று இன்னிங்ஸ் வெற்றியை ருசிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

- Advertisement -

வரலாற்று சாதனை:
முன்னதாக இப்போட்டியில் இந்தியா 228/5 என தடுமாறியபோது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 6வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்தார்கள். அந்த வேளையில் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் மீண்டும் அபாரமாக பார்ட்னர்ஷிப் அமைத்து 7வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்து இந்தியாவை நல்ல நிலையை எட்ட செய்தார்கள்.

Jadeja

இருப்பினும் அடுத்து வந்த ஜெயந்த் யாதவ் 2 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் கடைசி நேரத்தில் களமிறங்கிய முகமது சமியுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா அதிரடியாக பேட்டிங் செய்து 9வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.

- Advertisement -

மொத்தத்தில் இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் இழந்த பின்பும் கூட லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அபாரமான ஆட்டத்தால் 100க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப் ரன்களை இந்தியா 3 முறை குவித்தது. டெஸ்ட் போட்டிகளில் இப்படி 5 விக்கெட்டுகள் விழுந்த பின்பும் கூட 3 முறை 100+ பார்ட்னர்ஷிப் ரன்களை இந்தியா அமைப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை – விரைவில் இமாலய சாதனை நிகழ்த்த வாய்ப்பு

ஆம் கடந்த 1932 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய இதுவரை 560 போட்டிகளில் விளையாடியுள்ளது. இருப்பினும் அதில் ஒரு முறை கூட இதுபோல் 5 விக்கெட்டுகளை இழந்த பின்பு 3 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே கிடையாது. சுமார் 90 ஆண்டுகளுக்குப்பின் இப்போது தான் இதுபோன்ற ஒரு அரிதினும் அரிதான சாதனையை இந்தியா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement