ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக அங்கு விளையாடிய 2 தொடர்களையும் வென்ற இந்திய கிரிக்கெட் அணி இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக இந்தியா ஏ அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளது.
அது போக பெர்த் நகரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் இந்தியா ஏ அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த போட்டிகளில் விளையாடுவதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ருதுராஜ் கேப்டன்:
ஓரளவு நன்றாக விளையாடியும் சமீபத்திய தொடர்களில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்களிடம் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் உள்ளூர் தொடரில் தொடர்ந்து அசத்தி வரும் ருதுராஜ் 2024 ரஞ்சிக் கோப்பையில் சதமடித்தார். அதனால் இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருடைய தலைமையில் இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் சொன்னதை செய்ததால் தேர்வாகியுள்ளார். இந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் சாய் சுதர்சன் டெல்லிக்கு எதிராக இரட்டை சதம் அடித்ததால் வாய்ப்பு பெற்றுள்ளார்.
இந்தியா ஏ அணி:
அவர்களுடன் அபிமன்யு ஈஸ்வரன் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்திய வங்கதேச தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டி மற்றும் படிக்கல் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். பவுலிங் துறையில் கலில் அஹ்மத், முகேஷ் குமார், யாஸ் தயாள், நவ்திப் ஷைனி, ஆல் ரவுண்டராக அசத்தி வரும் தானுஷ் கோட்டியான் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: அடுத்த இரண்டாவது போட்டியிலாவது அவரை சேருங்க ப்ளீஸ்.. ரோஹித் சர்மாவிற்கு – ரசிகர்கள் கோரிக்கை
ஆஸ்திரேலியா ஏ தொடருக்கான இந்தியா ஏ அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், நித்திஷ் ரெட்டி, தேவ்தூத் படிக்கல், ரிக்கி புய், பாபா இந்திரஜித், இசான் கிசான், (கீப்பர்), அபிஷேக் போரல் (கீப்பர்), முகேஷ் குமார், கலீல் அகமது, யாஷ் தயாள், நவ்தீப் சைனி, மாணவ் சுதர், டானுஷ் கோட்டியான்



