268/7 டூ 417/7 ரன்ஸ்.. 439 டார்கெட்.. இங்கிலாந்து லயன்ஸ்’க்கு தண்ணி காட்டிய மும்பை ஜோடி.. இந்தியா ஏ அபாரம்

India a
- Advertisement -

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது போட்டி நார்த்தம்டன் நகரில் ஜூன் 6ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் சதத்தை அடித்து 112 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் கருண் நாயர் 40, துருவ் ஜுரேல் 52, நிதிஷ் ரெட்டி 34 ரன்களை எடுத்து கை கொடுத்தார்கள். இங்கிலாந்து லயன்ஸ்க்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

இந்தியா ஏ அசத்தல்:

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் முடிந்தளவு போராடியும் 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டாம் ஹெயின்ஸ் 54, எமிலியோ கே 71, ஜோர்டான் கோக்ஸ் 44 ரன்கள் எடுத்தார்கள். இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக கலீல் அகமது 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதற்கடுத்ததாக 21 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 5 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ராகுல் மீண்டும் நங்கூரமாக விளையாடினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரனுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் அரை சதத்தை அடித்து 51 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

அபார பார்ட்னர்ஷிப்:

அடுத்து வந்த கருண் நாயர் 15 ரன்னில் அவுட்டானாலும் இந்த பக்கம் தொடர்ந்து அசத்திய ஈஸ்வரன் அரை சதத்தை அடித்து 80 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அவருக்கு அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 28, நிதிஷ் ரெட்டி 42, சர்துள் தாக்கூர் 34 ரன்களை எடுத்து அவுட்டானார்கள். அப்போது 268/7 என இருந்த இந்தியா ஏ விரைவில் அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: பயமில்லாத சுதர்சன் இந்தியாவின் அடுத்த சூப்பர்ஸ்டாரா..அவரோட இடத்தை நிரப்புவார்.. பனேசர் நம்பிக்கை

ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த தானுஷ் கோட்டியான் – அன்சுல் கம்போஜ் ஆகியோர் அபாரமாக விளையாடி இங்கிலாந்து லைன்ஸ் அணிக்கு தொல்லையாக மாறினார்கள். உள்ளூரில் மும்பை அணிக்காக சேர்ந்து விளையாடிய அனுபவத்தைக் கொண்ட அந்த ஜோடி இப்போட்டியில் 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தியது. அதில் தானுஷ் 90*, கம்போஜ் 51* ரன்கள் எடுத்ததால் இந்தியா ஏ 417/7 ரன்களுடன் தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து லயன்ஸ்க்கு அதிகபட்சமாக ஜார்ஜ் ஹில் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த அணி வெற்றி பெற இந்தியா ஏ 439 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது.

Advertisement