462 ரன்ஸ்.. பந்தாடிய படிதார், சர்ப்ராஸ் கான்.. இந்தியா ஏ அணியிடம் அடங்கிய இங்கிலாந்து லயன்ஸ்

India a
- Advertisement -

இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ கிரிக்கெட் அணிகள் 3 பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. விரைவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரை முன்னிட்டு நடைபெறும் இந்த பயிற்சி போட்டிகளில் 2 நாட்களை கொண்ட முதல் போட்டி ஜனவரி 12ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 233 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டான் மௌஸ்லி 60, ஓலி ராபின்சன் 45 ரன்கள் எடுக்க இந்தியா ஏ அணி சார்பில் அதிகபட்சமாக மானவ் சுதாகர் 3, ஆகாஷ் தீப் 2 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

அசத்திய இளம் பேட்ஸ்மேன்கள்:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 32 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த பிரதோஷ் பால் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ராஜா படிதாருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த சர்பராஸ் கான் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு சவாலை கொடுத்தார்.

அந்த வகையில் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் முதலாவதாக ரஜத் படிதார் சதமடித்து 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய சர்ப்ராஸ் கான் சதத்தை தவற விட்டாலும் 96 ரன்கள் குவித்து அவுட்டானார். அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேஎஸ் பரத் 8 பவுண்டரி 3 சிக்சருடன் 64 (69) ரன்களும் இந்தியாவுக்காக முதல் முறையாக தேர்வாகியுள்ள இளம் வீரர் துருவ் ஜுரேல் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 50 (38) ரன்களும் விளாசி அவுட்டானார்கள்.

- Advertisement -

இறுதியில் புல்கிட் நரங் 25*, மாணவ் சுதர் 26, துஷார் தேஷ்பாண்டே 18* (12) ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா ஏ அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸை 462/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் அதிகபட்சமாக கால்ம் பார்க்கின்சன், ஜாக் கார்சன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அப்போது 2 நாட்கள் நிறைவு பெற்றதால் எதிர்பார்த்ததை போலவே இப்போட்டி டிராவில் முடிந்தது.

இதையும் படிங்க: வெறும் 41 ரன்ஸ்.. பெங்காலை தனி ஒருவனாக சாய்த்த புவி.. இந்திய அணியில் எடுக்க ரசிகர்கள் கோரிக்கை

அந்த வகையில் தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை இளம் பேட்ஸ்மேன்கள் பந்தாடி 462 ரன்கள் குவித்தது இந்திய அணிக்கு நேர்மறையானதாக அமைந்தது. மறுபுறம் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டிங் ஆலோசகராக இருந்தும் இப்போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் தடுமாற்றமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement