- Advertisement -
இந்திய கிரிக்கெட்

107க்கு ஆல் அவுட்.. ஆரம்பமே சொதப்பல்.. இளம் ஆஸி அணியிடம் சிக்கிய ருதுராஜ் இந்தியா ஏ அணி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. மிகவும் சவாலான ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடிய 2 தொடர்களிலும் இந்தியா வென்றது. அந்த வரிசையில் இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா தயாராகி வருகிறது.

அதற்கு முன்பாக இந்தியா ஏ அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 2 போட்டிகள் கொண்ட பயிற்சி டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றனர். அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 31ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்காய் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

ஆரம்பமே சொதப்பல்:

அதன் பின் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கோல்டன் டக் அவுட்டானார். மறுபுறம் நிதானமாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன் 7 ரன்களில் அவுட்டாகி சென்றார். அதனால் ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியா ஏ அணிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாக விளையாட முயற்சித்த போதிலும் 21 ரன்களிலும் தேவ்தூத் படிக்கல் 39 ரன்களிலும் அவுட்டானார்கள்.

பின்னர் மிடில் ஆர்டரில் மற்றொரு தமிழக வீரர் பாபா இந்திரஜித் 9, இஸான் கிசான் 4, நித்திஷ் ரெட்டி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் இந்தியா ஏ அணியை வெறும் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ப்ரண்டன் டோகேட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில் இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியிலேயே இந்தியா ஏ அணியினர் பேட்டிங்கில் சொதப்பியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -

இங்கயே இப்படியா:

குறிப்பாக அபிமன்யு ஈஸ்வரன், நித்திஷ் ரெட்டி ஆகியோர் ஆஸ்திரேலிய தொடருக்கான முதன்மை இந்திய அணியிலும் தேர்வாகியுள்ளனர். அவர்களும் இந்தப் போட்டியில் சுமாராக விளையாடியுள்ளனர். அதனால் ஆரம்பமே இப்படியென்றால் இன்னும் முதன்மை தொடரில் என்ன ஆகுமோ? என்று இந்திய ரசிகர்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் இந்தியா ஏ அணியில் பெரும்பாலான வீரர்கள் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறார்கள்.

இதையும் படிங்க: தோனியோடு சேர்ந்து தக்கவைக்க வைக்கப்பட வாய்ப்புள்ள 5 வீரர்களின் பட்டியல் இதுதான் – விவரம் இதோ

அதனால் இந்த பயிற்சி போட்டிகளில் பாடங்களை கற்று முதன்மை போட்டிகளில் அவர்கள் அசத்துவார்கள் என்று நம்பலாம். சொல்லப்போனால் வேகத்துக்கு சாதகமான மெக்காய் மைதானத்தின் பிட்ச்சில் இந்திய பவுலர்களும் அசத்தலாக பந்து வீசி வருகிறார்கள். அதனால் இந்த பதிவிடும் போது ஆஸ்திரேலியா ஏ 44-3 என தடுமாற்றமாக தங்களது ஆட்டத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -