டாஸ் ஜெயித்து வெற்றியை உறுதி செய்த கோலி. தீபக் சாகருக்கு பதிலாக இளம் வீரர் அறிமுகம் – விவரம் இதோ

Kohli

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன.

Cup

இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று 22 ஆம் தேதி கட்டாக் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி அவர் கூறியதாவது : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்து வீச விரும்புகிறோம். ஏனெனில் இந்த போட்டியில் டியூ ஒரு முக்கிய காரணியாக விளங்கும் என்று நான் கருதுகிறேன். இந்த மைதானத்தில் முதல் பந்து வீசுவது வெற்றிக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

Saini-1

ஏனெனில் கடந்த சில போட்டிகளில் டாசில் தோற்று நாங்கள் போட்டியை இழந்துள்ளதுள்ளோம். அதனால் இன்று டாசில் ஜெயித்தது எங்களுக்கு டாஸின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. எனவே இன்றைய போட்டியில் நாங்கள் டாஸ் ஜெயித்தது எங்களுக்கு கூடுதல் பலமாக நாங்கள் கருதுகிறோம். இந்த போட்டியில் முதுகுவலி காரணமாக தீபக் சாஹர் விளையாடவில்லை அதற்கு பதிலாக நவ்தீப் சைனி அறிமுகமாகிறார் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -