இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் ஓய்வில் இருந்த இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மீண்டும் டி20 அணிக்கு திரும்ப உள்ளனர்.

அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்டியா, ஜடேஜா போன்றோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அதுமட்டும் இன்றி மேலும் சில வீரர்களும் அணிக்கு திரும்பியுள்ளதால் இந்த டி20 தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
அதே வேளையில் இந்திய அணியிடம் ஒருநாள் தொடரினை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது டி20 தொடரில் எப்போதுமே பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வருவதால் இந்த தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி எதிர்க்க உள்ளதால் இந்த தொடரில் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை வெளிக்காட்ட விரும்பும். அந்த வகையில் தற்போது இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித், தினேஷ் கார்த்திக், அஷ்வின், ஜடேஜா, பாண்டியா, பண்ட், புவனேஸ்வர் குமார் போன்ற முழுபலம் வாய்ந்த அணியுடன் களமிறங்கவுள்ளது.
இதையும் படிங்க : நேரலை என்றும் பாராமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சண்டை போட்டுக்கொண்ட பாக் வீரர்கள் – என்ன நடந்தது
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நாளை ஜூலை 29 ஆம் தேதி இரவு 8 மணிக்கு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா தலைமையிலான முழு பலம் வாய்ந்த இந்திய அணி நாளை களமிறங்க உள்ளதால் நாளைய போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.



