50 ஓவர் உலககோப்பை மிஸ் ஆயிடுச்சி.. ஆனா அந்த கப் மிஸ் ஆகாது – ரவி சாஸ்திரி ஆருடம்

Ravi-Shastri
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது எந்த அணியிடமும் தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு சென்று அரையிறுதியில் கடினமான அணியாக பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை 50 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த 50 உலகக் கோப்பை தொடருக்கு அடுத்து அடுத்த ஆண்டு 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தபோது எனது இதயமே நெருங்கி போய்விட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணி வலிமையாக இருந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது வேதனையாக இருக்கிறது.

- Advertisement -

இருந்தாலும் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். தற்போது இந்த கோப்பையை நாம் தவறவிட்டிருந்தாலும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பையை நமது அணியே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் டி 20 வடிவத்திலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது என்று கூறினார்.

இதையும் படிங்க : யாராலும் நெருங்க முடியாத சச்சினின் சாதனையை.. உடைச்சு காமிச்சதே அவரோட தரம்.. கெயில் பாராட்டு

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஒரு உலக கோப்பையை வெற்றி பெறுவது என்பது சாதாரண விடயம் கிடையாது. சச்சின் கூட உலக கோப்பை கையில் ஏந்த ஆறு முறை முயற்சி செய்ய வேண்டியிருந்தது. எனவே நிச்சயம் முயற்சி செய்தால் நமக்கு உலகக்கோப்பை கிடைக்கும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement