- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – ஜிம்பாப்வே தொடர் நடக்கும் ஹராரே மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அத்தொடரில் ஓய்வு பெற்ற கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை தவிர்த்து பாண்டியா, சூரியகுமார் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கும் ஓய்வு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் சுப்மன் கில் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இந்தியா இத்தொடரில் களமிறங்குகிறது.

மறுபுறம் சிக்கந்தர் ராசா தலைமையில் நல்ல வீரர்களுடன் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் முனைப்புடன் ஜிம்பாப்வே விளையாடுகிறது. அந்த வகையில் சமமான திறமை கொண்ட வீரர்கள் இத்தொடரில் மோதுவதால் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடரின் 5 போட்டிகளும் ஜிம்பாப்வே தலைநகரில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் க்ளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

- Advertisement -

ஹராரே மைதானம்:
குறிப்பாக முதல் போட்டி ஜூலை 6ஆம் தேதி துவங்குகிறது. கடந்த 1992 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் இந்த மைதானத்தில் 2010 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இங்கு இதுவரை நடைபெற்ற 41 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங்கில் செய்த அணிகள் 23 முறையும் சேசிங் செய்த அணிகள் 18 முறையும் வென்றுள்ளன.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இதுவரை மொத்தம் 8 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 6 முறையும் ஜிம்பாப்வே 2 முறையும் வென்றுள்ளது. குறிப்பாக இந்த மைதானத்தில் மோதிய 7 போட்டிகளில் இந்தியா 5 வெற்றிகளையும் ஜிம்பாப்வே 2 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 178.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
ஜூலை 6 ஆம் தேதி ஹராரே நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
ஹராரே பிட்ச் வரலாற்றில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. இங்கு நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை இருக்கும் என்பதால் நிலைத்து நின்று சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க முடியும். அதே போல போட்டி நடைபெற நடைபெற பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: ரோஹித்திடம் வேணாம்ன்னு சொன்னேன்.. ஃபைனலில் அசத்தியது எப்படி? என்ற மோடியின் கேள்விக்கு விராட் கோலி பதில்

இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 156. இங்கு வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் அதிகமாக வென்றுள்ளன. மேலும் இந்தப் போட்டி பகல் நேரத்தில் நடைபெறுகிறது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றியை கொடுக்கலாம்.

- Advertisement -