- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs WI : 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – தமிழக வீரருக்கு இடம்

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பின்னர் அடுத்ததாக இந்திய அணி இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முன்னதாக ஏற்கனவே ஷிகார் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து தற்போது டி20 தொடருக்கான இந்திய அணியும் பி.சி.சி.ஐ இன்று தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதில் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட இருக்கிறார். அதோடு மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட விராத் கோலிக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கான காரணமும் வெளியாகவில்லை.

- Advertisement -

ஆனால் அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது. மேலும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் பும்ராவிற்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு கே.எல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் உடற்தகுதியை எட்டி இருந்தால் அணிக்கு திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ராகுல் திரிப்பாதி, வெங்கடேஷ் ஐயர், உம்ரான் மாலிக் ஆகியோர் மீண்டும் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டுள்ளனர். அதே வேளையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து டி20 தொடரில் இடம்பெறாத வேளையில் தற்போது மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியில் இடம் பிடித்துள்ளது வரவேற்பினை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மற்றொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கும் பினிஷராக இடம்பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய டி20 அணி வீரர்களின் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : அர்ஷ்தீப் பாஸ் ஆகிவிட்டார், ஆனால் உம்ரான் மாலிக் இன்னும் தயாராகவில்லை – முன்னாள் வீரர் கருத்து

1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) கே.எல் ராகுல், 4) சூரியகுமார் யாதவ், 5) தீபக் ஹூடா, 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) தினேஷ் கார்த்திக், 8) ரிஷப் பண்ட், 9) ஹார்டிக் பாண்டியா, 10) ரவீந்திர ஜடேஜா, 11) அக்சர் படேல், 12) ரவிச்சந்திரன் அஷ்வின், 13) ரவி பிஷ்னாய், 14) குல்தீப் யாதவ், 15) புவனேஷ்வர் குமார், 16) ஆவேஷ் கான், 17) ஹர்ஷல் படேல், 18) அர்ஷ்தீப் சிங்

- Advertisement -
Published by