இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போட்டி அட்டவணையில் ஏற்பட்ட மாற்றம் – விவரம் இதோ

Ind-vs-Wi

இந்திய அணி தற்போது வங்கதேச அணியுடனான கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்தது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

ind 1

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டிசம்பர் 6 ஆம் தேதி முதலாவது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது அது பாதுகாப்பு சிக்கல் காரணமாக அந்த போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏனெனில் டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்படும் போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பை மும்பை மைதானத்துக்கு வழங்க முடியாது என்று மும்பை மாநகர காவல்துறை ஏற்கனவே கிரிக்கெட் வாரியத்திடம் அறிவித்திருந்தது. மேலும் மும்பை கிரிக்கெட் நிர்வாகமும் அதனை பிசிசிஐ இயின் = பார்வைக்கு கொண்டு சென்றதால் தற்போது முதல் போட்டியை மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றியுள்ளது.

Dharmasena

மேலும் அதற்கு பதில் 11ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த போட்டியை மும்பைக்கு மாற்றியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரில் ஐசிசி கொண்டுவந்த நோபால்களை கவனிக்கும் புதிய டிவி அம்பயர் விதிமுறையை இந்த தொடரில் ஐசிசி அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -