வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா பார்படாஸ் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்த போட்டியில் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த இடங்களில் அவுட்டானாலும் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற இசான் கிசான் 52 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற உதவினார்.
வெதர் ரிப்போர்ட்:
இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி ஜூலை 29ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு அதே பார்படாஸ் நகரில் இருக்கும் கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டாலும் 2023 உலக கோப்பைக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் சோதனை முயற்சியாக சில மாற்றங்கள் நிகழ்வதற்கும் வாய்ப்புள்ளது.
மறுபுறம் முதல் போட்டியில் பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை எடுத்து போராடிய வெஸ்ட் இண்டீஸ் இம்முறை பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 1 – 1 என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்ய மீண்டும் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த 2 அணிகளுக்கு மழையும் ஒரு போட்டியாளராக வந்து இப்போட்டியில் விளையாட தயாராகியுள்ளது என்று சொல்லலாம்.
குறிப்பாக இந்த சுற்றுப்பயணத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் பிரகாசமாக இருந்த இந்தியாவின் வெற்றியை மழை வந்து தடுத்ததை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த வரிசையில் பார்படாஸ் நகரில் முதல் போட்டியில் ஓய்வெடுத்த மழை இந்த போட்டியில் மீண்டும் வருவதற்கு தயாராகியுள்ளது. அதாவது உள்ளூர் நேரப்படி போட்டித் துவங்கும் காலை 9.30 மணிக்கு 64% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள மாநில மையம் தெரிவிக்கிறது.
இருப்பினும் அது படிப்படியாக மதியம் 2 மணியளவில் 34% என்றளவு வரை குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் மீண்டும் 4 மணிக்கு மேல் அதிக மழை பெய்யும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பார்படாஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தின் இன்றைய விரிவான வெதர் ரிப்போர்ட் பின்வருமாறு:
காலை 9 மணி : 28 டிகிரி வெப்பம், 40% மழையளவு
காலை 10 மணி : 29 டிகிரி வெப்பம், 64% மழையளவு
காலை 11 மணி : 30 டிகிரி வெப்பம், 64% மழையளவு
மதியம் 12 மணி : 30 டிகிரி வெப்பம், 49% மழையளவு
மதியம் 1 மணி : 30 டிகிரி வெப்பம், 34% மழையளவு
மதியம் 2 மணி : 29 டிகிரி வெப்பம், 34% மழையளவு
மதியம் 3 மணி : 30 டிகிரி வெப்பம், 40% மழையளவு
மாலை 4 மணி : 29 டிகிரி வெப்பம், 64% மழையளவு
மாலை 5 மணி : 29 டிகிரி வெப்பம், 64% மழையளவு
மாலை 6 மணி : 28 டிகிரி வெப்பம், 49% மழையளவு
இதையும் படிங்க:IND vs WI : டொமெஸ்டிக் கிரிக்கெட்ல நாங்க அவரை நெறைய பாத்தது இல்ல. ஆனா சூப்பரா பவுலிங் பண்றாரு – ரோஹித் புகழாரம்
அதன் காரணமாக இப்போட்டி மழையின் குறுக்கீட்டுக்கு மத்தியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நடுவர்கள் ஓவர்களை குறைத்து இப்போட்டியின் முடிவை தீர்மானிக்க முயற்சிப்பார்கள் என்றே சொல்லலாம்.