IND vs WI : டி20 தொடரை வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் – முதல் டி20 நடக்கும் பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 (2) என்ற கணக்கில் வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வென்ற தங்களுக்கு 2வது போட்டியில் 5 வருடங்கள் கழித்த தோல்வியை பரிசளித்த வெஸ்ட் இண்டீஸை 3வது போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 2 – 1 என்ற கணக்கில் வென்று 2023 உலகக்கோப்பைக்கு தயாராகும் இறுதிக்கட்ட பயணத்தையும் வெற்றியுடன் துவக்கியது.

இதை தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்குகிறது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற இளம் வீரர்களுடன் களமிறங்குவதால் இந்தியா வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. மறுபுறம் ரோவ்மன் போவல் தலைமையில் தங்களுக்கு மிகவும் பிடித்த டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை அடித்து நொறுக்குவதற்காக நிக்கோலஸ் பூரான், ஹெட்மயர் போன்ற தரமான வீரர்களை கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் அறிவித்துள்ளது.

- Advertisement -

வரலாற்று புள்ளிவிவரங்கள்:
எனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விகளுக்கு குறைந்தபட்சம் இந்த டி20 தொடரில் பதிலடி கொடுப்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் தயாராகியுள்ளது. அதனால் இருநாட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ட்ரினிடாட் நகரில் இருக்கும் பிரைன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெறுகிறது.

1. வரலாற்றில் இதுவரை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 25 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 17 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் 7 போட்டிகளிலும் வென்றுள்ளன. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

2. குறிப்பாக இத்தொடர் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இவ்விரு அணிகள் மோதிய 8 போட்டிகளில் இந்தியா 5 வெற்றிகளை பெற்று முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் மட்டும் வென்றது. அதிலும் இப்போட்டி நடைபெறும் பிரையன் லாரா மைதானத்தில் வரலாற்றில் முதல் முறையாக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் ட்ரினிடாட் நகரில் போட்டி நாளன்று 50% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக உள்ளூர் நேரப்படி போட்டி நடைபெறும் காலை 10.30 முதல் 2.30 மணி வரை 40% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதனால் இப்போட்டி மழையின் குறுக்கீட்டுக்கு மத்தியில் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் மைதானத்தில் வரலாற்றில் இதற்கு முன் 2022இல் முதலும் கடைசியுமாக நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தினேஷ் கார்த்திக் 43*, ரோஹித் சர்மா 64 ரன்கள் எடுத்த உதவியுடன் 190 ரன்கள் குவித்து பின்னர் வெஸ்ட் இண்டீஸை 122/8 ரன்களுக்கு சுருட்டி வென்றது. அதே போல நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் 3வது போட்டியும் இந்த மைதானத்தில் தான் நடைபெற்றது.

அதிலும் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 351/5 ரன்கள் குவித்து பின்னர் வெஸ்ட் இண்டீஸை 151 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்றது. அந்த வகையில் முழுமையான திறமையை வெளிப்படுத்தினால் சிறிய பவுண்டரிகளை கொண்டுள்ள இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எளிதாக குவிக்கலாம். இருப்பினும் இயற்கையாகவே இங்குள்ள பிட்ச் மெதுவாக இருக்கும் என்பதால் போட்டி நடைபெற நடைபெற ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க:உட்காந்துட்டு நீங்க ரொம்ப ஈஸியா பேசுறது வலிக்குது, 2023 உ.கோ பற்றி ரசிகர்கள் – கபில் தேவ் விமர்சனத்துக்கு அஸ்வின் வேதனை பதில்

அதே போல திறமையான மித வேகப்பந்து வீச்சாளர்களும் இங்கு ஆரம்பத்திலேயே நல்ல விக்கெட்டுகளை எடுக்கலாம். அதனாலேயே இங்கு வரலாற்றில் நடைபெற்ற 34 கரீபியின் டி20 லீக் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வெறும் 141 ரன்களாக இருக்கிறது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவித்தால் வெற்றி கிடைக்கலாம்.

Advertisement