மீண்டும் ரத்து செய்யப்படும் அபாயத்தில் இருக்கும் இந்தியா – இலங்கை தொடர் – இந்தமுறை என்ன பிரச்சனை தெரியுமா ?

sky
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது 13ஆம் தேதி துவங்க இருந்தது. ஆனால் இங்கிலாந்து நாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய இலங்கை அணியில் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதன் காரணமாக இந்த அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது.

INDvsSL

- Advertisement -

அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போட்டி தேதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஜூலை 18-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை இந்த தொடரானது நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தொடர் மீண்டும் திட்டமிட்டபடி துவங்குமா ? என்பதில் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஏனெனில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய இலங்கை அணியை தனிமைப்படுத்திய கிரிக்கெட் நிர்வாகம் அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் தற்போது இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஒரு இலங்கை வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Sl

இதன் காரணமாக போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா ? அல்லது ரத்து செய்யப்படுமா ? என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. ஏனெனில் தற்போது வீரர்களின் குழுவில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

sl

இதன் காரணமாக நிச்சயம் இந்த தொடரில் சிக்கல் ஏற்படும் என்றும் இன்னும் தொடர் துவங்க ஐந்து நாட்களே உள்ளதால் என்ன நடக்கும் என்பது தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் 18 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வாரியம் மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணையை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement