இந்தியா – இலங்கை தொடருக்கான தேதிகள் அறிவிப்பு. எந்த சேனலில் ஒளிபரப்பு தெரியுமா ? – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிடையாது

Sl
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை மாதம் நடைபெறும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளதால் இளம் வீரர்களை கொண்ட புதிய இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் என்று கூறப்பட்டிருந்தது.

Dhawan-Pandya

- Advertisement -

அந்த வகையில் இந்த புதிய இந்திய அணியை ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவர் தான் தலைமை தாங்குவார்கள் என்றும் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த தொடரின் முதற் கட்டமாக போட்டிகள் நடக்கும் முழு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி இந்தியா இலங்கை ஆகிய அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி 13ஆம் தேதி மதியம் 1.30 pm மணிக்கு துவங்குகிறது. அதே போன்று இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மூன்று ஆட்டங்களும் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது.

indvssl

அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது 21ஆம் தேதி துவங்கி 23, 25 ஆகிய நாட்களில் நடைபெற்று முடிகிறது. இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்குகிறது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே போட்டிகள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாது என்றும் இந்த தொடரின் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தை சோனி குழுமம் பெற்றுள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.

sony

அதன்படி போட்டிகள் சோனி 1, சோனி 2, சோனி 3, சோனி 4, சோனி சிக்ஸ் ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தற்போது சோனி சேனல் தமிழிலும் போட்டியை ஒளிபரப்பும் திட்டத்தை வைத்துள்ளதால் நீங்கள் தமிழிலும் கண்டுகளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement