இந்தியா இலங்கை 2 ஆவது டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? – தர்மசாலா மைதான ரிப்போர்ட் இதோ

Dharamsala
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள லக்னோ நகரில் துவங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்தது.

- Advertisement -

இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே சொதப்பிய இலங்கை பரிதாப தோல்வி அடைந்தது.

தரம்சாலாவில் 2வது டி20:
இதை தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் கடைசி 2 போட்டிகள் பிப்ரவரி 26, 27 ஆகிய அடுத்தடுத்த தேதிகளில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் அங்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

jadeja

குறிப்பாக இந்த தொடரின் 2வது போட்டி நாளை இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முன்கூட்டியே கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக கண்டு களிக்கலாம்.

- Advertisement -

அழகோ அழகு தர்மசாலா:
இந்த போட்டி நடைபெற உள்ள தரம்சாலா கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் மிக மிக அழகான ஒன்றாக இருப்பதால் இந்த மைதானத்திற்கு என்று இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பல ரசிகர்கள் உள்ளார்கள். ஏனெனில் இமாச்சல பிரதேச மலைத் தொடர்களில் அமைந்திருக்கும் இந்த கிரிக்கெட் மைதானத்தின் பின்புறத்தில் அழகான பனி சூழ்ந்த மலைத்தொடர்கள் உள்ளது. எனவே பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிப்பதுடன் இதமான வெப்பம் நிலவும் என்பதால் இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்ப்பது என்பது ரசிகர்களுக்கு சொர்க்கமான உணர்வைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

Dharamshala HPCA Cricket Stadium

1. மொத்தம் 23,000 ரசிகர்கள் அமர்ந்து நேரடியாக கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் வரலாற்றில் இதுவரை 9 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

- Advertisement -

2. அதில் 4 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் பெற்றுள்ளன. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.

Rohith-3

3. இந்தப் மைதானத்தில் இந்தியா இதுவரை வரலாற்றில் 2 போட்டிகளில் மோதியுள்ளது. இந்த மைதானத்தில் முதல் முறையாக கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் அபாரமாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு இங்கு மீண்டும் அதே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்க இருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

4. டி20 வரலாற்றில் இந்த மைதானத்தில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரராகவும் சதம் அடித்த ஒரே இந்திய வீரராகவும் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் 66 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட சதமடித்து 106 ரன்கள் விளாசி இந்த சாதனை படைத்துள்ளார்.

indvswi

5. இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் : 199/5, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2015.

வெதர், பிட்ச் ரிப்போர்ட்:
இந்த போட்டி நடைபெறும் தரம்சாலா மைதானம் இமாச்சல பிரதேசத்தின் மலைத்தொடர்களில் இருப்பதால் வழக்கமாகவே இங்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். தற்போது அதே போலவே நாளை அதாவது பிப்ரவரி 26ஆம் தேதி துவங்க இருக்கும் இந்தியா – இலங்கை மோதும் 2வது டி20 போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே நாளைய 2 போட்டியில் மழையின் குறுக்கீடு நிச்சயமாக இருக்கும் என்பதால் போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Deepak

அதேசமயம் இதே மைதானத்தில் பிப்ரவரி 27ம் தேதி இந்த 2 அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி போட்டியின் போது மழைக்கான வாய்ப்பு குறைவு என்பதால் அந்த போட்டி முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரம்சாலா மைதானத்தில் நிலவும் கால சூழ்நிலைகளால் இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சு சற்று அதிகமாக செல்லுபடியாகும். அதேபோல் முழு திறமையை வெளிப்படுத்தும் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டுகள் கண்டிப்பாக உண்டு. எனவே இங்கு பேட்ஸ்மேன்கள் நிதானத்துடன் விளையாடினால் மட்டுமே பெரிய ரன்களை குவிக்க முடியும். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 140 ஆகும், சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 124 ஆகும். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement