- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – இலங்கை ஒருநாள் தொடர் நடைபெறும் கொழும்பு மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் ரிப்போர்ட்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் தலைமையில் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்குகிறது.

அவருடன் விராட் கோலி, கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இன்னும் சில தரமான நட்சத்திர வீரர்கள் களமிறங்குகின்றனர். எனவே ஒருநாள் தொடரிலும் ரோஹித் சர்மா தலைமையிலான முழு பலத்துடன் கூடிய இந்திய அணி இலங்கையை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் டி20 தொடரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை பரிசளித்த இலங்கை ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்க போராட உள்ளது.

- Advertisement -

கொழும்பு மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் 3 போட்டிகளும் ஆகஸ்ட் 2, 4, 7ஆம் தேதிகளில் இலங்கையின் கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 1986இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த மைதானத்தில் இதுவரை 150 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 80 வெற்றிகளும் சேசிங் செய்த அணி 59 வெற்றிகளும் பெற்றன. எஞ்சிய போட்டியில் மழையால் கைவிடப்பட்டன. இந்த மைதானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா 38 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இந்தியா 19 வெற்றிகளையும் 16 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 3 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் (375, இலங்கைக்கு எதிராக, 2017) அடித்த அணியாக இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. அத்துடன் 2023 ஆசிய கோப்பை ஃபைனல் இங்கே தான் நடைபெற்றது. அதில் இந்தியாவிடம் 50 ரன்கள் சுருண்ட இலங்கை குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக மோசமான சாதனை படைத்துள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:
கொழும்பு மைதானத்தின் பிட்ச் வரலாற்றில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே வருகிறது. குறிப்பாக ஆரம்பத்தில் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் குவிக்கலாம். அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றினால் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இதையும் படிங்க: அப்டின்னா இதற்கு முன் இந்திய அணி பிரிஞ்சுருந்துச்சா? சூர்யகுமார் கருத்தை மீது அஜய் ஜடேஜா அதிருப்தி

இருப்பினும் நேரம் செல்ல செல்ல கொழும்பு பிட்ச் சுழலுக்கு சாதகமாக மாறும். அதை பயன்படுத்தி ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 228 ரன்கள். இங்கு வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் அதிகமாக வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

- Advertisement -