அப்டின்னா இதற்கு முன் இந்திய அணி பிரிஞ்சுருந்துச்சா? சூர்யகுமார் கருத்து மீது அஜய் ஜடேஜா அதிருப்தி

Ajay Jadeja
- Advertisement -

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக 3வது போட்டியில் சூப்பர் ஓவரில் வென்ற இந்திய அணி இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்றது. அத்துடன் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா டி20 கிரிக்கெட்டில் வெற்றி நடை போட துவங்கியுள்ளது.

முன்னதாக முதல் தொடரிலேயே வெற்றி பெற்ற சூரியகுமார் தாம் கேப்டனாக இருப்பதை விட லீடராக இருக்க விரும்புவதாக கூறினார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை முன்பு வரை போட்டிகள் முடிந்ததும் இந்திய வீரர்கள் 2 – 3 உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததாக சூரியகுமார் கூறினார்.

- Advertisement -

அஜய் ஜடேஜா அதிருப்தி:
ஆனால் தாம் கேப்டனானதும் அனைவரையும் ஒரே அணியாக ஒன்றாக அமர்ந்து பேச வைத்துள்ளதாகவும் சூரியகுமார் தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பொதுவாக நாங்கள் போட்டியை அல்லது தொடரை வெல்லும் போது ஒன்றாக ஒரே அணியாக உட்கார மாட்டோம். இந்த ட்ரெண்ட் உலகக் கோப்பையில் துவங்கியது. அப்போதிலிருந்து வெற்றி தோல்வியை பார்க்காமல் போட்டி முடிந்ததும் நாங்கள் ஒன்றாக அமர்வோம்”

“குறிப்பாக நாங்கள் 2 – 3 பிரிவுகளாக உட்காராமல் ஒரே அணியாக உட்கார முடிவெடுத்துள்ளோம். அது இந்த தொடரிலும் நடந்தது. அது எங்கள் அணிக்குள் நல்ல உறவையும் நட்பையும் ஏற்படுத்த உதவுகிறது” என்று கூறினார். ஆனால் அவரது கருத்தை பார்த்த முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அப்படியானால் ஒரு மாதத்திற்கு முன்பு வரை இதற்கு முந்தைய இந்திய அணிகள் தனித்தனியே பிரிந்திருந்தார்களா? என்று ஆச்சரியத்துடன் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அஜய் ஜடேஜா பேசியது பின்வருமாறு. “அணி விளையாட்டில் நீங்கள் இதைத்தான் எதிர்பார்ப்பீர்கள். வீரர்கள் சிறிய பிரிவுகளாக உட்கார மாட்டார்கள் என்று இன்றும் பேசுவதை பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால் இதற்கு முந்தைய இந்திய அணிகள் ஒன்றாக அமரவில்லையா? தற்போது இந்த மாற்றத்தை தாம் கொண்டு வந்துள்ளதாக சூரியகுமார் குறிப்பிடுகிறார்”

இதையும் படிங்க: இதற்கு மேல என்னால பாராட்ட முடியாது.. அவர் மாதிரியே ரோஹித்தும் மகத்தான கேப்டன்.. ரவி சாஸ்திரி

“உண்மையில் இது மிகவும் பழையது. அவரை நான் சந்தேகப்படவில்லை. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் இருந்து தான் இந்திய அணியினர் வெற்றிக்கு பின் ஒன்றாக உட்கார்ந்து பேசத் துவங்கியுள்ளோம் என்று அவர் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

Advertisement